இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, December 6

நடிகர் விஜய் 20ம் ஆண்டு திரை நிறைவு விழா




இளைய தளபதி விஜய்யின் சினிமாவுக்கு இன்று(04.12.12) 20வது பிறந்த நாள். ஆம்...1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதிதான் விஜய்யின் முதல் படமான "நாளைய தீர்ப்பு" வெளிவந்தது. அதன்படி இன்று அவரது சினிமா வாழ்க்கையின் 20ம் ஆண்டு. அதையொட்டி அவர் கடந்து வந்த சினிமா வாழ்க்கையின் சின்ன பிளாஷ் பேக் 20. அதாவது இளையதளபதியின் டுவென்டி-20...!

1.லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதை அப்பாவிடம் சொல்ல தயக்கம். அம்மாவிடம் சொன்னார். அம்மா அப்பாவுக்கு சிபாரிசு செய்தபோது அப்பா சொன்ன வார்த்தை "இந்த மூஞ்சியெல்லாம் எவன் சினிமாவுல பார்ப்பான். ஏதாவது படிச்சு பெரிய ஆளாகுற வழியப்பாரு" என்பதுதான். அந்த விஜய்யைத்தான் இன்று சினிமா உலகம் கொண்டாடுகிறது.

2.விஜய்யின் முதல் படம் "நாளைய தீர்ப்பு" அட்டர் ஃப்ளாப். கோபக்கார தந்தையான எஸ்.ஏ.சி., தன் மகனை சினிமா உலகம் ஏற்கிற வரை விடப்போவதில்லை என்று உறுதிபூண்டு அடுத்து தான் விஜயகாந்த் நடிப்பில் எடுத்த "செந்தூரப்பாண்டி" படத்தில் விஜயகாந்துடன் நடிக்க வைத்தார். அதன் பிறகு விஜய் ஹீரோவாக நடிக்க எடுத்த "ரசிகன்"தான் விஜய்க்கு ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

3.விஜய் நடித்த முதல் காமெடி படம் "கோயம்புத்தூர் மாப்பிள்ளை". ஆக்ஷன் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டிய விஜய்யை அந்த பாதைக்கு திருப்பிய படம் "திருமலை".

4.விஜய்யின் முதல் ஹீரோயின் கீர்த்தனா. அதன் பிறகு அமலாபால் வரை 22க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

5.சாதாரண நடிகராக இருந்த விஜய்யை, பெண்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து ஹீரோவாக்கிய படங்கள் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை

6.54 படங்களில் நடித்துள்ள விஜய்யின் 50வது படம் சுறா.

7.நடிகர் திலகம் சிவாஜியுடன் "ஒன்ஸ்மோர்" விஜயகாந்துடன் "செந்தூரப்பாண்டி", அஜீத்துடன் "ராஜாவின் பார்வையிலே",  சூர்யாவுடன் "பிரண்ட்ஸ்" ஜீவா, ஸ்ரீகாந்த்துடன் "நண்பன்" படங்களில் நடித்தார்.

8.விஜய்க்கு பிடித்த படம் "காதலுக்கு மரியாதை", "கில்லி".

9.டாட்டா டொக்காமோ, ஜோய் ஆலுக்காஸ், கோகோ கோலா, ஆகியவை விஜய் நடித்த முக்கிய விளம்பர படங்கள்.

10.விஜய் பெற்ற விருதுகள் கலைமாமணி (1998), தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை-1998), டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் (2007), தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது (2000), தமிழக அரசின் சிறப்பு விருது (திருப்பாச்சி-2005). இவை தவிர விஜய் டி.வியின் 4 வருதுகளும், தனியார் அமைப்புகள் சார்பில் 20க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.

11. இதுவரை பிற மொழிப் படங்களில் நடித்திராத விஜய் முதன் முறையாக "ரவுடி ரத்தோர்" என்ற இந்திப் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். தந்தை எஸ்.ஏ.சி இயக்கிய "சுக்ரன்" படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.

12."குஷி"யில் விஜய்யுடன் நடித்த ஜோதிகா, சூர்யாவின் மனைவியானார், "காதலுக்கு மரியாதை"யில் விஜய்யுடன் நடித்த ஷாலினி, அஜீத்தின் மனைவியானார். இரண்டுமே மாபெரும் வெற்றிப் படங்கள்.

13."ரசிகன்" படத்திலேயே பாடகரான அறிமுகமான விஜய் அவ்வப்போது பாடி வந்திருக்கிறார். தன் தாயார் ஷோபாவுடன் இணைந்தும் பாடியிருக்கிறார். கடைசியாக துப்பாக்கி படத்தில் பாடினார். தற்போது இயக்குனர் விஜய் படத்திலும் பாடியிருக்கிறார். அது இன்னும் வெளிவரவில்லை.

14.விஜய் நடிப்பில் கலெக்ஷனை அள்ளிய படங்கள் கில்லி, சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி

15."அழகிய தமிழ் மகன்", வில்லு போன்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

16.நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், வசந்த வாசல், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பிரியமானவளே, ஆகிய படங்களில் விஜய் நடித்த கேரக்டரின் பெயரும் விஜய்.

17.அம்மாவுடன் பாடியிருக்கும் விஜய். அம்மாவுடன் இணைந்து ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரம்தான் இப்போது டாப் ரேங்கில் உள்ளது.

18.விஜய்யுடன் நடித்த இஷா கோபிகர், பிரியங்கா சோப்ரா, அசின் ஆகியோர் பாலிவுட்டில் பிரபலமானார்கள்.

19.நண்பன், போக்கிரி, கில்லி, காவலன் உள்ளிட் பல ரீமேக் படங்களிலும் விஜய் நடித்துள்ளார்.

20.இளையதளபதியின் ரசிகர் மன்றம், 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாறியது.

100வது படத்துக்கும், இயக்கத்தின் அடுத்த கட்டத்துக்கும் "வீ ஆர் வெயிட்டிங் விஜய்

Thursday, November 29

100 கோடி துப்பாக்கி வசூல் சாதனை..!





தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு ரிலீசானது துப்பாக்கி படம்.
பொதுவாக விஜய் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. எதிர்பார்த்தபடியே துப்பாக்கி படமும் ரிலீசாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50கோடி வசூலை அள்ளிய இப்படம் இப்போது ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.
இதுகுறித்து துப்பாக்கி படத்திற்கான இணையதளத்தில் டைரக்டர் முருகதாஸ் கூறியிருப்பதாவது, துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. 10நாளில் இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில்‌ சேரும் 2வது தமிழ்படம் துப்பாக்கி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலான தமிழ்ப்படடம் என்று இருந்து வந்த நிலையில், இப்போது அந்த லிஸ்ட்டில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய்யின் துப்பாக்கி படமும் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. ‌மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே துப்பாக்கி படம் தான் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Friday, November 23

துப்பாக்கியில் கலக்கிட்டீங்க போங்க.பாராட்டிய அஜீத்





நடிகர் அஜீத் குமார் துப்பாக்கி படத்தைப் பார்த்துவிட்டு விஜய் மற்றும் முருகதாஸை அழைத்து பாராட்டியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய-காஜல் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் மற்றும் முருகதாஸுக்கு அஜீத் குமார் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்



Wednesday, November 21

விஜய்யுடன் இணையும் மோகன்லால்

Mohan Lal Join With Vijay

விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர். மோகன்லால் தமிழில் பாப்கார்ன் என்ற படத்திலும், இரு ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் நடித்துள்ளார். அடுத்து அவர் விஜய்யுடன் கைகோர்க்கிறார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம். விஜய் தற்போது இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - விஜய் படம் தொடங்கும் எனத் தெரிகிறது

Saturday, November 17

விஜய் - அமலா பால் நடிக்கும் பட பூஜை!

Vijay Amala Paul New Movie Pooja



துப்பாக்கி படத்துக்குப் பிறகு ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் - அமலா பால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்தப் படத்துக்கு முதலில் தலைவன் என்று பெயரிட்டிருந்தனர். ஆனால அந்தத் தலைப்பை, சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் நடிக்கும் படத்துக்கு வைத்துவிட்டதால், வேறு தலைப்பை யோசித்து வருகின்றனர். இந்த படத்தை மிஸ்ரி புரொடக்சன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். சத்யராஜ நடித்த பல படங்களின் தயாரிப்பாளர் - பைனான்ஸியர் என்பதாலோ என்னமோ, சென்டிமென்டாக அவருக்கும் ஒரு வேடத்தைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படப்பூஜை விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை அமலாபால் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். படப்பிடிப்பை இம்மாத இறுதியி்ல் வெளிநாட்டில் ஆரம்பிக்கின்றனர்.

Thursday, November 15

துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் முடிவு


துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

படத்தின் காட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தினரைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சென்னையில் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அக்காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எதிராக காட்சிகள் அமைப்பது எங்கள் நோக்கமல்ல. படத்தில் வரும் காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ரஜினி (2 தடவை ) பார்த்த துப்பாக்கி !




ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'துப்பாக்கி' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

தீபாவளி அன்று மட்டும் 'துப்பாக்கி'  9 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வசூல் செய்து இருக்கிறது. கேரளாவில் முதல் நாள் மட்டும் 85 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.

மக்களிடையே கிடைத்து இருக்கும் வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் தாணு " துப்பாக்கி படம் வரவேற்பை பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி விஜய்யின் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படமாக 'துப்பாக்கி' இருக்கும்.

இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மற்றும் மொத்த 'துப்பாக்கி' படக்குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமன்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று காலை தனது டிவிட்டர் இணையத்தில் "நம்ம தலைவர் ரஜினி சார் எனக்கு போன் செய்து பேசினார். " துப்பாக்கி படத்தினை இதுவரை ரெண்டு தடவை பார்த்து விட்டேன். அற்புதமான வேலை.. நல்ல படம்!" என்றார். சந்தோஷமாக இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.

Thursday, November 8

துப்பாக்கி

'துப்பாக்கி' இசை வெளியீட்டு விழா
விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 

விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள். 

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல,  விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது. 

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

சென்சார் முடித்து U சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் கவர தீபாவளியன்று நவம்பர் 13ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Thursday, October 25

விஜய் மறுபடியும் சூப்பர் குட் படம்!


விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தலைவன்' படப்பிடிப்பு விரைவில் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கிறது. இப்படத்தின் முன்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் படத்தினை முடித்து விட்டு ஆர்.பி,செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் நடிகர் விஜய். இப்படத்தினை இயக்குகிறார் நெல்சன். இவர் ஏற்கனவே 'முருகா' என்னும் படத்தினை இயக்கி இருக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இமான். 'கும்கி' படத்தின் பாடல்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான். தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

Saturday, October 6

துப்பாக்கி' வெடிக்க தயாராகி விட்டது ஏ.ஆர்.முருகதாஸ்


Photo: ஏ.ஆர்.முருகதாஸ் " நண்பர்களே... 10ம் தேதி  'துப்பாக்கி' படத்தின் டீஸருடன் பத்திரிகையாளர் சந்திப்பு, 11ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. 'துப்பாக்கி' வெடிக்க தயாராகி விட்டது " என்று தெரிவித்து இருக்கிறார்

ஏ.ஆர்.முருகதாஸ் " நண்பர்களே... 10ம் தேதி 'துப்பாக்கி' படத்தின் டீஸருடன் பத்திரிகையாளர் சந்திப்பு, 11ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. 'துப்பாக்கி' வெடிக்க தயாராகி விட்டது " என்று தெரிவித்து இருக்கிறார்

Friday, October 5

துப்பாக்கி - தலைப்புக்கு இனி தடை இல்லை


Photo: துப்பாக்கி - தலைப்புக்கு இனி தடை இல்லை.
வழக்கை வாபஸ் பெற்றது 'கள்ள துப்பாக்கி ' .

விஜய் நடித்துள்ள துப்பாக்கி  படம் தொடர்பான எதிர்ப்பு மனுவை, நார்த் ஈஸ்ட்பிலிம்ஸ் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.

துப்பாக்கி - தலைப்புக்கு இனி தடை இல்லை.
வழக்கை வாபஸ் பெற்றது 'கள்ள துப்பாக்கி ' .

விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் தொடர்பான எதிர்ப்பு மனுவை, நார்த் ஈஸ்ட்பிலிம்ஸ் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது

Monday, September 10





'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்தார் சமந்தா. சரும நோய் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் ஷங்கரின் ' ஐ', மணிரத்னத்தின் 'கடல்' ஆகிய இரண்டு படங்களில் இருந்தும் விலகினார்.

ஆனால்,  சமந்தா தற்போது பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் விஜய் - இயக்குனர் விஜய் இணையும் படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இப்படத்தினை பிரபல பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்க இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

சமந்தா தெலுங்கில் மகேஷ் பாபுவிடன் இணைந்து நடித்த 'தூக்குடு' படத்தின் மூலமாக தான் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதால் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வரலாம் என்பது தான் சமந்தாவின் திட்டம். அனைத்தும் நல்லபடியாக அமைந்து இந்த படத்தில் நடித்து விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வருகிறார் சமந்தா. 

அடுத்து சமந்தா நடிப்பில்  தமிழில் 'நீதானே என் பொன்வசந்தம்' வெளிவர இருக்கிறது

Wednesday, August 29

கேரளாவில் துப்பாக்கி!





விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தலைப்பு விவகாரம் இன்னும் முடியவில்லை. அதற்குள் டிவி உரிமை, ஏரியா உரிமை என வியாபாரம்  வரிசையாக களைக் கட்ட தொடங்கி இருக்கின்றன.

விஜய் நடித்த 'நண்பன்' படத்தினை ஒளிபரப்பிய அன்று விஜய் டிவிக்கு அதிக TRP வந்தது. சமீபத்தில் எந்த ஒரு படத்திற்கும் அவ்வளவு TRP கிடைக்கவில்லை.

'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் கடும் போட்டிக்கு இடையே விஜய் டிவி வாங்கி இருக்கிறது. ஆனால் எவ்வளவு விலைக் கொடுத்து வாங்கியது என்பது இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் 'துப்பாக்கி' படத்தின் கேரளா உரிமைக்கு கடும் போட்டி நிலவியதாம். இறுதியில், படத்தின் உரிமையை  'நண்பன்' படத்தினை விட சுமார் 50% அதிகமாக கொடுத்து வாங்கியிருக்கிறது தமீன்ஸ் நிறுவனம். 

'துப்பாக்கி' படத்தின் தலைப்பு பற்றிய வழக்கு 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 24ம் தேதி பிரச்னை ஒத்தி வைக்கப்பட்டால் தலைப்பை மாற்றி விடலாம் என்று முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Monday, August 27

எல்லா பெருமையும் எஸ்.ஏ.சி-க்கு தான்! : ஷங்கர்

தமிழில் விஜயகாந்த், இந்தியில் ரஜினிகாந்த், மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி என நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளியான எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்றது  எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை'. இப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காகிறது. 

இம்முறை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பு மற்றும் இயக்கம் மேற்பார்வை ஆகியவற்றை மட்டும் மேற்கொள்கிறார். ரீமேக் படத்தினை 'இயக்குகிறார் சினேஹா பிரிட்டோ. ரீ‌மாசென், பியா, பிந்துமாதவி, 'ஆச்சர்யங்கள்' பட நாயகன் தமன்குமார், சின்னத்திரை நகைச்சுவையாளர் மகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 

'சட்டம் ஒரு இருட்டறை' படக்குழுவையும், FIRST LOOK-ஐயும் இயக்குனர் ஷங்கர் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் பேசியது : 

"நான் பெரிதாக எதுவும் சாதித்ததாக எனக்கு என்றுமே தோன்றியது கிடையாது. அப்படி நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என நீங்கள் யாராவது கருதினால் அந்த பெருமை மொத்தமும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களையே சாரும். காரணம் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்களிடம் உதவியாளராக சேருவதற்கு முன் ஒருசில மேடை நாடகங்களில் நடித்தபடி நாடக நடிகராக இருந்த நான், மிகுந்த சோம்‌பேறியாகவும் இருந்தேன். 

அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் சென்றேன். ஆனாலும் உதவி இயக்குநர் ஆகிவிட்டேன். எஸ்.ஏ.சி. அவர்களிடம்தான் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன். அதேமாதிரி ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் உள்ளிட்டவைகளையும் அவரிடம் கற்றுகொண்டு தான் இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்.

என்னை மாதிரி ஏராளமானவர்களை வளர்த்துவிட்டவர் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவரிடமிருந்து புதிதாக வந்திருக்கும் இளம் பெண் இயக்குநர் சினேகா பிரிட்டோவும், இந்த படமும், இதில் நடித்திருக்கும் நட்சத்திரங்களும், பணிபுரிந்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்தார்.

அவ்விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது "  ஷங்கரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அன்றும் சரி, இன்றும் சரி, சொன்னால் சொன்னபடி நடந்து கொள்வார். ஒரு படவிழா, நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன விழா, ஏதுவிழா என்று எதுவும் கேட்காமல் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்துவிட்டார். அதுதான் ஷங்கர்.

அவர் என்னிடம் உதவியாளராக இருந்து என்ன கற்றுக் கொண்டாரோ எனக்கு தெரியாது... ஆனால் அவரிடம் இத்தனை பிஸியிலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் திறமை என்னை வியக்க வைக்கும் விஷயமாகும். இன்று கூட எங்கோ உள்ள பெருங்குடியில் ஷூட்டிங்கில் இருந்தவர் எனக்காக இங்கு வந்திருக்கிறார். 

'சட்டம் ஒரு இருட்டறை' பழைய படத்தில் குடும்பத்திற்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை சொல்லி இருந்தேன். இதில் காதலுக்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை இன்றைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப பிரமாண்டமாக சொல்ல வேண்டும் என்றார் என் பேத்தி சினேகா பிரிட்டோ. அதற்காகத்தான் இந்த அறிமுக விழாவிற்கு பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை அழைத்திருந்தேன்" என்றார்.

Thursday, August 23

துப்பாக்கி' முடித்தவுடன் 'யோஹன்' இல்லை கௌதம் மேனன்

துப்பாக்கி' முடித்தவுடன் 'யோஹன்' படத்தில் விஜய் நடிக்கவில்லை இயக்குனர் விஜய் இயக்கும் படத்தில் நடிக்கிறார்" என்று உலா வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் இயக்குனர் கெளதம் மேனன்.

தனது அடுத்த படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று தனது டிவிட்டரில் இணையத்தில் தெரிவித்து இருக்கிறார் கெளதம்.

கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில் தெரிவித்து இருப்பது " நீதானே என் பொன்வசந்தம் படத்தின் 8 பாடல்கள் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும். இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

யோஹன் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய்யுடன் யோஹன் படம் தொடங்கவில்லை. 

விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குகிறார் இயக்குனர் விஜய். 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை முடித்துவிட்டு எனது அடுத்த படத்தினை முடிவு செய்வேன்" என்று தெரிவித்து 

Saturday, August 11

தள்ளிப் போகும் யோஹன்!

இரண்டு நாட்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது.  'துப்பாக்கி'யை முடித்ததும் விஜய் 'யோஹன்' படத்தில் நடிக்கப் போவதில்லையாம்.. அதற்கு முன்பே இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தான் அந்த செய்தி.

இது குறித்து நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில்,  'துப்பாக்கி' படத்தின் மொத்த பணிகளையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்துக் கொடுக்க இருக்கிறார் விஜய். ஒரு மாதம் ஒய்வுவிற்கு பின் நவம்பர் மாதம் முதல் விஜய் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

'தாண்டவம்' படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆகஸ்ட் 15ம் தேதி இசை வெளியீட்டு விழா முடித்து, செப்டம்பரில் வெள்ளித்திரையில் தாண்டவமாட இருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் விஜய் - விஜய் இணைவதால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அதுமட்டுமன்றி, 'தாண்டவம்' படத்தின் டிரெய்லர்  - உருவான விதம் வீடியோக்களை பார்த்த நடிகர் விஜய் மிகவும் சந்தோஷப்பட்டு, நவம்பரில் நமது படத்தை துவங்குகிறோம் என்று தெரிவித்து இருக்கிறாராம்.

விஜய் - கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'யோஹன்' படம் எப்போது துவங்குகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

Tuesday, August 7

கன்னடத் தயாரிப்பாளரின் படத்தில் விஜய்!

K Manju Produce Ilayathalapathy Vijay Movieபெங்களூர்: பிரபல கன்னட திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.மஞ்சு முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வருகிறார். அதில் நாயகனாக நடிக்கப் போகிறார் விஜய்.

பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் இதைத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார், ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டார். அதில் விஜய்யும் கலந்து கொண்டார். அப்போது தமிழில் நேரடிப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார் புனீத். இந்த நிலையில், கன்னடத் தயாரிப்பாளர் ஒருவரின் தமிழ்ப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் புனீத்தும் இடம் பெறுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கன்னடத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர் கே.மஞ்சு. தமிழ்ப் படங்கள் பலவற்றை கர்நாடகத்தில் விநியோகிக்கும் உரிமையைப் பெற்றிருப்பவர் இவர். லேட்டஸ்டாக இவர் வாங்கிய படம் பில்லா 2. அதற்கு முன்பு விஜய்யின் வேலாயுதம் படத்தையும் இவர் வாங்கி விநியோகித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம் மஞ்சு.

விஜய்யின் காவலன் பட ரிலீஸின்போது விஜய்யை பெங்களூருக்கு வரவழைத்து, அவரை கன்னடத்தில் பேச வைத்து கன்னட மீடியாக்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய்க்குப் பெரும் பெயர் வாங்க முக்கியக் காரணமே மஞ்சுதான். மேலும் விஜய்க்கும், மஞ்சுவுக்கும் இடையே நல்ல நட்பும் இருக்கிறதாம். இதனால் மஞ்சு தன்னை அணுகியபோது உடனே ஓகே. சொல்லி விட்டாராம் விஜய்.

இதுகுறித்து மஞ்சு கூறுகையில், ஆரம்ப கட்ட அளவில் பேச்சுக்கள் உள்ளன. விஜய் சாருடன் பேசியுள்ளேன். நல்ல கதையைக் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதுதொடர்பாக தற்போது தீவிரமாக பேசி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் எல்லாம் முடிவாகி விடும் என்றார்.

அதேசமயம், விஜய் படத்தை தயாரிப்பதற்கு முன்பு இன்னொரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கும் திட்டமும் மஞ்சுவிடம் உள்ளதாம். இதை இயக்கப் போவது சசிக்குமாராம். ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம். விரைவில் இது தொடங்குமாம். தமிழ், கன்னடனம், தெலுங்கு எனமூன்று மொழிகளில் இது நேரடியாக தயாராகிறதாம்

விஜய்க்கு வில்லனாகிறாரா சுதீப்?

Sudeep Turns Baddie Vijay S Yohan பெங்களூர்: விஜய் நடிக்கும் யோஹன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க கன்னட முன்னணி நடிகரும், நான் ஈ படத்தில் அசத்தியவருமான சுதீப்பை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

திறமைகள் பல நிரம்பிய சுதீப் ஒரு வழியாக முழு அளவிலான தென்னிந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். கன்னடத்தில் மட்டுமே கலக்கி வந்த அவர் தற்போது நான் ஈ படத்தின் மூலம் நாடறிந்த நடிகராகி விட்டார்.

நான் ஈ மூலம் கிடைத்த புகழால் தற்போது தமிழில் நேரடியாக நடிக்கும் பட வாய்ப்புகள் சுதீப்பைத் தேடி வர ஆரம்பித்துள்ளன.

அதேபோல கன்னடம், தெலுங்கிலும் கூட அவரை நோக்கி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் பாய்ந்தோடி வருகின்றனவாம்.

அதில் முக்கியமானது கெளதம் மேனன் இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பாம். விஜய்தான் இதில் ஹீரோ. நீண்ட நாட்களாக கிடப்பி்ல உள்ள இப்படத்தை தூசி தட்டி கையில் எடுக்கிறார் கெளதம்.

இப்படத்தை முழுக்க முழுக்க நியூயார்க் மற்றும் பிற நாடுகளில் படமாக்குகிறார் கெளம் மேனன். இதில் ஒற்றன் வேடத்தில் வருகிறார் விஜய். இந்த நிலையில்தான் நான் ஈ படத்தைப் பார்த்த கெளதமுக்கு சுதீ்ப்தான் யோஹன் படத்திற்கு சரியான வில்லனாக இருப்பார் என்ற யோசனை தோன்றியதாம். இதுகுறித்து சுதீப்பிடமும் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் சுதீப் இதுகுறித்து உறுதியாக கூற மறுக்கிறார். இதை வதந்தி என்று கூட அவர் கூறுகிறார். தற்போது அவர் பச்சன் என்ற கன்னடப் படத்தில் பிசியாக இருக்கிறாராம். இதில் பாவனா நடிக்கிறார்.

Sunday, August 5

விஜயுடன் ஜோடி சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா

Andrea Wants Pair With Vijay நடிகை ஆன்ட்ரியாவுக்கு விஜய் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் பிரபலமானவர் ஆன்ட்ரியா ஜெரிமியா. நடிகையாக மட்டுமின்றி தன்னை ஒரு பாடகியாகவும் நிலை நிறுத்தியுள்ளார். கமல் ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று முன்னணி நடிகைகள் எல்லாம் ஏங்க அந்த வாய்ப்பு ஆன்ட்ரியா வீட்டு வாசலுக்கே வந்தது. இதையடுத்து அவர் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே அவர் கமலின் மன்மதன் அம்பு படத்தில் நாயகன் அறிமுகமாகும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாட அழைத்துள்ளனர். ஆன்ட்ரியாவும் சென்று பாட்டை பாடிக் கொடுத்துவிட்டு, விஜயுடன் நடிக்கை ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று வாய்விட்டே கேட்டுவிட்டராம்.

இப்படித் தான் லக்ஷ்மி ராய் இயக்குனர் விஜயிடம் நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அதற்கு அவரும் தான் விஜயை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆன்ட்ரியாவுக்கு அப்படி யாரும் வாக்கு கொடுத்தது போன்று தெரியவில்லை

Friday, August 3

மும்பையில் சந்தித்த பிரபுதேவா - விஜய் - அசின்: மீண்டும் கைகோர்க்கிறதா போக்கிரி டீம்?

Pokkiri Team Met Mumbai விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது தனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் என்பார் அடிக்கடி பிரபு தேவா.

இருவரும் இணைந்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தையும், வில்லு என்ற சுமார் படத்தையும் தந்துள்ளனர். மீண்டும் இணைவார்களா என்று கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பிரபு தேவாவின் இந்திப் படம் ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடி கலக்கினார் விஜய்.

இந்த நிலையில் மும்பையில் திடீரென விஜய்யும் அசினும் பிரபு தேவாவைச் சந்தித்தனர்.

'துப்பாக்கி' படவேலைகளுக்காக மும்பை சென்றிருந்த விஜய், அருகில்தான் பிரபுதேவா வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்றார்.

விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று கூறப்படுகிறது!

Wednesday, August 1

கிராமப் பகுதிகளில் அதிக நற்பணிகள் செய்வோருக்கு ஊக்கப் பரிசு வழங்கினார் நடிகர் விஜய்

Vijay Honours His Fan Club Functionaries தனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளில் அதிக நற்பணிகள், குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதிக நற்பணிகள் செய்வோருக்கு ஊக்கப் பரிசு வழங்கினார் நடிகர் விஜய்.

விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகின்றனர். விஜய் பிறந்த நாள், அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டுமல்லாமல், இயற்கைப் பேரிடர்களின் போதும் அவர்கள் தங்களால் ஆன பணிகளை மக்களுக்குச் செய்கின்றனர்.

இத்தகைய பணிகளை அவர்கள் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவு மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

நற்பணிகளில் ஈடுபட்டுள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களை தனது ஜேஎஸ் கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்தார் விஜய். அதிக நற்பணிகள் செய்த ரசிகர்களுக்கு செயின் மற்றும் மோதிரங்களைப் பரிசளித்தார்.

அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கியதோடு, நீண்டநேரம் அனைவருடனும் பேசி, அறிவுரை வழங்கினார்.

ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே மன்ற பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், அடுத்த ஆண்டும் ரசிகர்களுக்கு இதுபோல விருந்தும் பரிசளிப்பும் தொடரும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday, July 23

என் மகன் ஜீவாவின் தீவிர ரசிகன்: விஜய்

My Son S Big Fan Jiiva Vijay முகமூடி இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் தனது மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.
ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடந்தது. விழாவில் விஜய் மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இசை சிடியை விஜய் வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.
இந்த விழா நடந்த அரங்கிற்குள் விஜய் நுழைந்தது முதல் மேடையில் அமரும் வரை அவரது ரசிகர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது ஜீவா நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு என்பதை அனைவரும் மறந்துவிட்டனர். மேடையில் பேசியவர்கள் கூட ஜீவாவை மறந்துவிட்டு விஜய் பற்றியே பேசினர். உடனே சுதாரி்த்துக் கொண்ட விஜய் பேச வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், என் மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன். எனக்கு ஜீவாவை ஒரு மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் பிடிக்கும். என் மகனைப் போன்று நானும் முகமூடி படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் விஜயைப் புகழ்ந்து பேசினாலும் விழா நாயகன் ஜீவா சிரித்த முகத்தோடு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

Saturday, July 21

முகமூடி' இசை வெளியீட்டு விழா!

யு.டிவி நிறுவனத்தின் முதல் நேரடி பிரம்மாண்ட தயாரிப்பு 'முகமூடி'. ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தினை மிஷ்கின் இயக்கி இருக்கிறார். கே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய் 'முகமூடி' இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.


படத்தின் FIRST LOOKல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட TEASER மட்டுமன்றி படத்தின் புதிய டிரெய்லரும், 'நாட்டுல நம்ம வீட்டுல' பாடலை திரையிட்டார்கள்.


இசையமைப்பாளர் கே, முகமூடி படத்தின் 'வாய மூடி சும்மா இருடா', 'தீம் மியூசிக்',  'நாட்டுல நம்ம வீட்டுல'  ஆகிய பாடல்களை விழா மேடையில் நேரடியாக பாடினார்கள்.  'நாட்டுல நம்ம வீட்டுல'  பாடலை எழுதி பாடி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.


இசையை வெளியிட்டு பேசிய விஜய் " நடிகர் ஜீவாவிற்கு எனது மகன் சஞ்சய் தீவிர ரசிகன். இந்த இசை வெளியீட்டு விழாவில் அவனால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகையால் என்னுடைய வாழ்த்தை கூறும்படி சொன்னான். அனைத்து இயக்குனர்களுக்கும் ஜீவாவை பிடித்து இருக்கிறது." என்று கூறிவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.


"இவ்விசை வெளியீட்டு விழாவிற்கு ஒரே ஒரு செல்போன் மெசேஜ் மூலம் வருவேன்" என்று விஜய் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜீவா.


இயக்குனர் மிஷ்கின் " நான் எதோ இதுவரை எடுக்காத கதையை எடுத்து இருக்கிறேன் என்று எல்லாம் கூற மாட்டேன். பெரிய எதிர்ப்பார்ப்போடு எல்லாம் இப்படத்திற்கு வராதீர்கள். இது ஒரு சாதாரண கதை. 


பிறகு படம் பார்த்துவிட்டு எதிர்ப்பார்ப்போடு போனோம். ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை என்று ப்ளாக்கில் திட்டி எழுதுகிறார்கள்.


என்னுடைய சூப்பர் ஹீரோ ஒரு ப்ளாட்பார்ம்மில் இருந்து தான் உருவாகிறான் என்பது மாதிரி தான் காட்சி வைத்து இருக்கிறேன். இதில் இருந்தே தெரிந்து இருக்கும் முகமூடி ஒரு சாதாரண கதை என்பது" என்று கூறினார்.


இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

Tuesday, July 17

'நண்பன்' வெளியிடும் 'முகமூடி'

தமிழ்த் திரையுலகில், கதாநாயகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பது போல், இயக்குனர்கள் சிலருக்கும் ரசிகர் வட்டம் உள்ளது. அத்தகைய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர்.


சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என இவரது படங்கள் அனைத்துமே இவருக்கு பல தரப்பில் இருந்து ரசிகர்களை சேர்த்து இருக்கிறது.


இவரது இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதை 'முகமூடி' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.


ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் என ஒரு திரைப் பட்டாளமே நடிக்க, 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த ' கே ' இசையமைத்து இருக்கிறார். தங்களது முதல் பிரம்மாண்ட தயாரிப்பாக 'முகமூடி' படத்தினை தயாரித்து இருக்கிறது யு.டிவி நிறுவனம்.


'முகமூடி' படத்தின் FIRST LOOK வெளியான போதே படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்தித்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 20ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. விஜய் இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார். 


மிஷ்கின் படங்கள் என்றாலே படத்தில் மஞ்சள் கலர் சேலை கட்டிக் கொண்டு, ஒரு பெண் ஆடுவது போன்று ஒரு குத்துப்பாடல் இருப்பது வழக்கம். 'கத்தாழக் கண்ணாலே', 'வாள மீனுக்கும்' போன்ற பாடல்கள் இவரது படத்தில் இடம்பிடித்து,  பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.


ஆனால் 'முகமூடி' படத்தில் அவ்வாறு குத்துப் பாடல் எதுவுமே இல்லையாம். அதற்கு பதிலாக TASMAC பாரில் ஒரு பாடல் இடம் பெற்று இருக்கிறதாம். அப்பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்கிறது படக்குழு. குடிமகன்களுக்கான Theme Song- ஆ?

Saturday, June 30

துப்பாக்கி'க்கு தடை??




விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

தடை ஏன் என்பதற்கான காரணம் :

ரவிதேவன் தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் 2009ம் ஆண்டு 'கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு 'துப்பாக்கி' என்ற தலைப்பை பதிவு செய்தார்.

'துப்பாக்கி' படத்தலைப்புக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்த லோகோ வடிவமைப்பும், 'கள்ளத்துப்பாக்கி' படத்தலைப்பின் லோகோ வடிவமைப்பும் ஒரே மாதிரி இருந்தது.

இதையடுத்து 'கள்ளத்துப்பாக்கி' படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நியாயம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, நீதிமன்றத்துக்குப் போனது 'கள்ளத்துப்பாக்கி' படக்குழு.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு 'துப்பாக்கி' என்று தலைப்பு வைக்கக்கூடாது என தடை விதித்துள்ளார்!

Tuesday, June 19

ஜூலை 1-ம் தேதி துப்பாக்கி ட்ரைலர் - ஏ ஆர் முருகதாஸ்

Thuppakki Trailor On July 1st ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ட்ரைலர் காட்சி வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகிறது.
வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ட்ரைலர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் பிறந்த நாளுக்கு 10 நாட்கள் கழித்துதான் ட்ரைலர் வெளியாகும் என முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி. கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒரு போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
எனவே படத்தின் முன்னோட்டக் காட்சியான ட்ரைலரை விஜய் பிறந்த நாளன்று வெளியிடக் கோரி வந்தனர்.
இதுகுறித்து முருகதாஸ் தனது ட்விட்டரில், "வரும் 22-ம் தேதி பெரிய படங்களெல்லாம் வெளியாகின்றன. அன்று துப்பாக்கி ட்ரைலர் வெளியிடுவது முடியாது. 10 நாட்களில் வெளியிட்டுவிடுவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி படம் வெளியாகும் என்று தெரிகிறது!

Monday, June 18

துப்பாக்கி விஜய் ஃபர்ஸ்ட் புல்லட்


விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்ச்!'' - ஆம்,  ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடிகளின் அடுத்த வெடி... 'துப்பாக்கி’!
''விஜய் ஒரு போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்னு ஏகப்பட்ட செய்திகள் அலையடிக் குதே... எது உண்மை?''
''என்னங்க இது... க்ரோர்பதி ஷோ மாதிரி ஸ்ரெய்ட்டா பதில் கேட்கிறீங்க. இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை. ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம். ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ஆகஸ்ட் 15-ல் துப்பாக்கி வெடிக்கும்!''








''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''
''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க. வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன். காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''






''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''
''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு. ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!'' 
''விஜய் சுருட்டு பிடிக்கிற 'துப்பாக்கி’ போஸ்டர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எதிர்ப்புத் தெரிவிச்சு இருந்தாங்களே?''
''என் படங்கள்ல வில்லன்கூட ஸ்மோக் பண்ண மாட்டார். பள்ளிக்கூடப் பெண்கள் காதலிக்க மாட்டாங்க. இதெல்லாம் எனக்கு நானே வெச்சுக்கிட்ட கட்டுப்பாடுகள். ஆனா, 'துப்பாக்கி’யில் அந்த சுருட்டு ஷாட் தவிர்க்கவே முடியலை. ஆனா, பப்ளிசிட்டிக்கு அதை அனுப்பிச்ச பிறகு எனக்கே ரொம்ப உறுத்தலா இருந்தது. அதைத் தூக்கிடலாம்னு நானே யோசிச்சுட்டு இருந்தப்ப, அந்த எதிர்ப்பு வந்தது. நாங்களே அதை நீக்கிட்டோம். யாரோட வற்புறுத்தலுக்கும் பயந்து அதை எடுக்கலை. ஆனா, இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. 'ஸ்மோக் பண்ணக் கூடாது’ங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா, இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க சிகரெட் கம்பெனி முன்னே நின்னு, அதை நிரந்தரமா மூடச் சொல்லிப் போரா டலாமே? 'எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணு தோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே?  அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!''
''விஜய் இந்தி 'ரௌடி ரத்தோர்’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கார். நீங்க ளும் அடுத்து இந்திப் படம்தான் இயக்கப் போறீங்க... ரெண்டு பேரும் இந்தியிலும் இணைவீங்களா?''
''அந்த அளவுக்கு இன்னும் யோசிக்கலை. இப்ப எங்க ரெண்டு பேர் கவனமும் 'துப்பாக்கி’ மேல் மட்டும்தான். மதன் கார்க்கி எழுதுன ஒரு பாட்டை விஜய் சாரே பாடிஇருக்கார். 'நான் பாடியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க’னு சொன்னார். இருந்தாலும் சொல்லிட்டேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு பாடியிருக்கார். ஆல்பத்துல அது நிச்சயம் ஹைலைட். 'துப்பாக்கி’ ஷூட்டிங் சமயம்தான், 'சார்... பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா?’னு கேட்டார். 'தாராளமா! அதே மாதிரி நாளைக்கு என் இந்திப் படத்துக்குக் கூப்பிட்டாலும் வருவீங்கதானே’னு ஜாலியா கேட்டேன். 'ஓ, அப்படி ஒண்ணு இருக்கா. நீங்க கூப்பிட்டாலும் வருவேன்’னு சொல்லியிருக்கார். இதுல மேட்டர் என்னன்னா... என் அடுத்த இந்திப் படம் 'துப்பாக்கி’ ரீ-மேக். அக்ஷய் குமார் நடிக் கிறார். அதனால, விஜய் எனக்குக் கொடுத்த அந்த சாய்ஸைப் பயன்படுத்திக்க ஏகமா வாய்ப்பு இருக்கு!''
'' 'ரமணா’வுக்குப் பிறகுதான் விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு வந்தார். விஜய்கிட்டேயும் அரசியல் ஆர்வம் இருக்கு. அதுக்கேத்த தோட்டா 'துப்பாக்கி’யில் இருக்கா?''
''ஹீரோக்களின் அரசியல் ஆசைக்குப் படம் பண்றது என் வேலை இல்லை. என் கதைக்கு எது தேவையோ, அதை மட்டும்தான் பண்ணுவேன். ஹீரோவுக்கு அந்தப் படம் ஹிட்டாகணும், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகணும். அவ்வளவுதான். 'ரமணா’வுக்குப் பிறகு விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்ததும், அதே 'ரமணா’ தெலுங்கு ரீ-மேக் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி சார் அரசியல்ல நுழைஞ்சதும் நானே எதிர்பார்க்காம நடந்தது!''







Saturday, June 16

மலையாளப் படத்தில் நடிக்கிறார் விஜய்?

Vijay Malayalam Movie
மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!


சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.


கருத்தன் என்ற மலையாளப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அந்த போஸ்டர் மூலம் தெரிந்து கொண்ட மலையாள ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.


இந்தப் படத்தை மஸ்தான் முஜீப் கான் இயக்கப் போவதாகவும், எஸ்என் சாமி திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் வேறு குறிப்பிட்டிருந்தனர்.


இது உண்மைதானா என விஜய்யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.


அவர் கூறுகையில், "மலையாளப் படத்தில் விஜய் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தெலுங்கு, இந்தியில் வந்த வாய்ப்புகளைக் கூட அவர் ஏற்கவில்லையே," என்றார்.


ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பின் விஜய் மலையாளத்தில் ஒரு படம் நடிக்கக்கூடும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!

Monday, June 11

காயம் ஏற்பட்ட போதிலும் விஜய் வலியோடு நடித்தார்: முருகதாஸ்

Vijay Acts Unmindful Pain Murugado துப்பாக்கி ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் உயரத்தில் இருந்து குதித்தபோது விஜய்க்கு கால் இடறி மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலியையும் பொருட்படுத்தாமல் அவர் நடித்ததாகவும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவி்த்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய்க்கு காயம் ஏற்பட்டு தற்போது அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விஜயக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்று முருகதாஸ் கூறுகையில்,
துப்பாக்கி படத்திற்காக சண்டை காட்சி ஒன்றை படமாக்கினோம். அந்த காட்சிக்காக விஜய் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். அவரும் உயரத்தில் இருந்து குதித்தார். ஆனால் திடீர் என்று கால் இடறியதில் அவரது மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் குதித்தபோது மூட்டு பெல்ட் அணியவில்லை. காலில் காயம் ஏற்பட்ட போதிலும் வலியோடு அந்த காட்சியை நடித்துக் கொடுத்தார். அதன் பிறகே சிகிச்சைக்கு சென்றார் என்றார்.
விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் ஷூட்டிங்கிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இன்னும் 4 நாட்கள் ஷூட்டிங் தான் பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் யோஹன்' ஜுலை மாதம் முதல் துவங்குகிறது.

இயக்கம், தயாரிப்பு என அனைத்து மொழிகளிலும் தற்போது பிஸியாக இருக்கும் இயக்குனர்  கெளதம் வாசுதேவ் மேனன்.


இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுலும் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார். முதன் முறையாக இப்படத்திற்கு கௌதமுடன் கை கோர்த்து படத்துக்கு இசை கோர்க்கிறார் இளையராஜா.


தனது அடுத்த தயாரிப்பு என்ன, இயக்கம் என்ன என்பது குறித்து  இணையத்தில் கெளதம் மேனன் தெரிவித்து இருப்பது :


" 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்னும் படத்தினை தயாரிக்க இருக்கிறேன். பிரேம் சாய் என்ற இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சா தெலுங்கிலும் நடிக்க இருக்கிறார்கள். 'COURIER BOY KALYAN' என்று தெலுங்கில் இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டு இருக்கிறது.


இப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்க இருக்கிறார். அவரது இசையை கேட்டேன் அருமையாக இருக்கிறது. ஜுன் 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு படப்பிடிப்பு துவங்குகிறது.


'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசை வெளியீடு ஜுலை முதல் வாரத்தில் இருக்கும். ஜுலை 1ம் தேதி கூட இருக்கலாம். படத்தின் இசை கண்டிப்பாக அனைவரையும் கவரும். படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளிவரும். 'மாற்றான்' அலையில் காணாமல் போக விருப்பமில்லை.


தயாரிப்பில் இருக்கும் 'தங்கமீன்கள்' ஒரு மென்மையான படம். விரைவில் அப்படம் வெளிவரும். யுவனின் இசை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும். ராம் ஒரு அற்புதமான இயக்குனர்.


எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது.  'யோஹன்' - ஆக்ஷன் அதகளம்! "

துப்பாக்கி’ பட ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் விஜய் காயம் : லண்டனில் சிகிச்சை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema newsதுப்பாக்கி’ பட ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் நடித்த விஜய்க்கு முட்டியில் காயம் ஏற்பட்டது. அதற்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார் என்றார் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘துப்பாக்கி’. சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார் இயக்குனர். உயரமான இடத்திலிருந்து விஜய் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. உயரத்தில் இருந்து விஜய் குதித்த வேகத்தில் அவரது கால் இடறியது. இதில் தரையில் அவர் கால்மோதி முட்டியில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. தற்போது விஜய் குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுகிறார். இதுபற்றி முருகதாஸ் கூறும்போது,‘‘சண்டை காட்சி படமாக்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. உயரத்தில் இருந்து குதித்தபோது கால் இடறி காயம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்தது. கால் முட்டியில் வழக்கமாக அணியும் பாதுகாப்பு கவசத்தை அவர் அணியாமல் நடித்ததுதான் இதற்கு காரணம். ஆனாலும் குறிப்பிட்ட காட்சியை வலியோடு செய்து முடித்தார். காயத்துக்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார்’’ என்றார். இன்னும் 4 நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. லண்டனில் இருந்து விஜய் திரும்பியவுடன் அதில் நடிக்கிறார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளா

Wednesday, June 6

விஜய் விஷ்ணுவர்தனா

சுதீப், பாவனா, ப்ரியா மணி நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் 'விஷ்ணுவர்தனா'. இப்படத்தின் இயக்குனர் பொன். குமரன் சென்னையைச் சேர்ந்த தமிழர். 


குமரன் இப்படத்தை விஜய்க்கு போட்டு காட்டியிருக்கிறார். தனக்கேற்ற படமாக இருப்பதால், விஜய் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.


'துப்பாக்கி', 'யோஹன்' .. அதனை அடுத்து இயக்குனர் விஜய்யின் படம் என தொடர்ந்து கால்ஷீட் டைரி நிரம்பி இருப்பதால், இம்மூன்று படங்களுக்குப் பிறகு இந்த ரீமேக் படத்தில் நடிப்பார் என்கிறது கோலிவுட் தகவல்.


இப்போது ப்ரியா மணி நடிப்பில் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் தயாராகும் 'சாருலதா' என்னும் படத்தில் மும்முரமாக இருக்கிறார் பொன்.குமரன். இப்படத்தை வெளியிட்டபின் 'விஷ்ணுவர்தனா' படத்துக்கு தமிழில் விஜய்க்கு ஏற்றபடி திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்குவாராம்

Tuesday, June 5

விஜய் பிறந்த நாளில் வெளியாகும் அஜீத் படம்!!

Ajith S Billa 2 Hit Screens On June 22 அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பில்லா 2 வரும் ஜூன் 22-ம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.
அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது.


சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.


பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.


வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.


ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது!

Tuesday, May 29

விஜய், ஷாருக்கான், பிரபுதேவா பங்கேற்ற 'ரவுடி' பார்ட்டி!

Prabu Deva Hosts Party Foractors From Tamil And Hindi ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.


இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.


ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Monday, May 28

நண்பன் அக்கா.. கடல் அம்மா !

ஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தில் ஜீவாவிற்கு அக்காவாக நடித்தவர் தேவி. கூத்துப்பட்டறையில் இருந்து வந்துள்ள தேவி பிரபல நாடகக் கலைஞர் ஆவார்.


'நண்பன்' பட வரவேற்பினால் உற்சாகத்தில் இருந்தவர், இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம். 


காரணம் மணிரத்னம் இயக்கி வரும் 'கடல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'கடல்' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு நடிப்புப் பயிற்சிக்காக தேவியை ஒப்பந்தம் செய்திருந்தார் மணிரத்னம். 


இவர் நடிப்பு கற்றுக் கொடுக்கும்போது, இவரது  திறமையைப் பார்த்து வியந்த மணிரத்னம் 'கடல்' படத்தில் கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்கச் சொல்லிவிட்டாராம்.  தனக்கான பாத்திரத்தில் சரியாக நடித்துக் கொடுத்தாராம் தேவி. 


'கடல்' வெளியாகும் முன் பல படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Sunday, May 13

ராஜேஷ் இயக்கத்தில் விஜய்?

துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.


இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது. 


இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.


சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.  ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் கூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..


முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.

துப்பாக்கி' போஸ்டர் விவகாரம்?

துப்பாக்கி படத்தின் FIRST LOOK விளம்பரத்திற்கு எந்த அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அந்த அளவிற்கு தற்போது எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.


போஸ்டர்களில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தலைமையிலான 'பசுமைத் தாயகம்' கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், " 'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.


'துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.


மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், 'துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், 'துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.


எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரியிருந்தார்.


இந்த அறிக்கை விஜய் ரசிகர்களையும், துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸையும் கோபப்படுத்தி இருக்கிறது.  


இந்தியில் அனுராக் கஷ்யாப் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'GANGS OF WASSEYPUR' போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் வெளியிட்டு  " இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்!" என்று காட்டமாக கூறியுள்ளார்

Saturday, May 12

இந்தி படத்தில் விஜய் டான்ஸ்!

சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான 'ரவுடி ரத்தோர்' அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வருகிறது. இப்படத்தினை இயக்கி வருகிறார் பிரபுதேவா. சஞ்சய் லீலா பன்சாலி, யு.டிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.


' போக்கிரி ',' வில்லு' படங்களின்  மூலம் நண்பர்களாக வலம் வருகிறார்கள் விஜய்யும் பிரபுதேவாவும்.


விஜய்யை சந்தித்த பிரபுதேவா  தான் இயக்கி வரும் 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் குமாருடன் ஒரு பாடலுக்கு நடனமாட முடியுமா? என்று கேட்டாராம்.


உடனே விஜய் யோசிக்காமல் "கண்டிப்பாக ஆடுகிறேன் " என்று கூறி விட்டாராம். இதனால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் பிரபுதேவா. 'துப்பாக்கி' படப்பிடிப்பிற்காக மும்பையில் விஜய் இருந்ததால், படபடவென விஜய்யை வைத்து பாடல் காட்சியை எடுத்து முடித்து விட்டார் பிரபுதேவா. 


'ரவுடி ரத்தோர்' படத்திற்கு இந்தி திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் விஜய்யும் நடனமாடி இருப்பதால், விஜய் இந்தி திரையுலக ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமாக இது நல்ல சந்தர்ப்பமாக அமையும். 


ஏற்கனவே விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அக்ஷய் குமார் விருப்பம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

Monday, April 30

கமலுக்கப்பறம் விஜய் தான்!

விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ்  புல்லட் போட்டு வரும் 'துப்பாக்கி'  பளபளப்பாக தயாராகி வருகிறது. 


'துப்பாக்கி' படம் குறித்தும், எந்த அளவிற்கு பணிகள் முடிந்து இருக்கின்றன என்பது குறித்தும் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்து இருக்கும் பேட்டியில் இருந்து,


" துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 60% முடிவடைந்து விட்டது. மும்பை வாழும் ஒரு தமிழ் குடும்பத்தினை பற்றிய கதை. அதனால் முழுக்க முழுக்க மும்பையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


விஜய்யிடம் நான் இவ்வளவு TIMING, SENSE OF HUMOUR எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஒரு பக்க வசனம் ஆகட்டும், நீளமான காட்சிகள் ஆகட்டும் எல்லாவற்றையும் ஒரே டேக்கில் செய்து முடித்து விடுகிறார்.


உண்மையிலேயே இதனை நான் ஒரு கமர்ஷியல், மாஸ் ஹீரோ விஜய்யிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இதனை நான் அவரிடமே கூறி இருக்கிறேன்.


கமல் சாருக்கு பிறகு விஜய் சார் தான் தொடர்ந்து பாடல்களை பாடி வந்தார். ஏனோ அவரும் 6 வருடங்களாக பாடல் எதுவும் பாடுவது இல்லை.


விஜய்யை பாட வைத்து அதனை நமது படத்திற்கு உபயோகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஹாரிஸ் சாரும் அந்த பாடலை கம்போஸ் செய்து முடித்தவுடன் விஜய்யை இந்த பாடலை பாட வைக்கலாமா என்று கேட்டார். நானும் நம்ம நினைத்தோம், இவர் கேட்கிறாரே என்று உடனே சரி என்று கூறி விட்டேன். அப்பாடல் கண்டிப்பாக 'துப்பாக்கி' ஆல்பத்தில் ஒரு சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


'துப்பாக்கி' படத்தின் கதையினை முதலில் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் விஜய் சாரின் கால்ஷீட் தயாராக இருக்கிறது என்றவுடன் அக்கதையினை விஜய் சார் வைத்து தமிழில் உடனே துவங்கி விட்டேன். இப்படத்தினை முடிந்தவுடன் இதே கதையினை அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் பண்ண இருக்கிறேன்.


'கஜினி' படத்தினை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. " என்று தெரிவித்து இருக்கிறார்.

Thursday, April 26

விஜய் தயாரிக்கும் படத்தில் ரீமா சென்!

தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ரீமா சென். விஜய்யுடன் 'பகவதி', விக்ரமுடன் 'தூள்', கார்த்தியுடன் 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் நடித்தவர், கடைசியாக தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ராஜபாட்டை' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார்.


இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபருக்கும் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்தையொட்டி படங்களில் நடிப்பதை ரீமா சென் தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் நடிகர் விஜய் தயாரிக்க இருக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரீமா சென்.


எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1981ம் ஆண்டு வெளிவந்த படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. தமிழில் வரவேற்பை பெற்றதையடுத்து  பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் ரஜினிகாந்த் நடிக்க 'அந்தாகானூன்' என்ற பெயரில் வெளியாகி, ரஜினிக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. 


அனைத்து மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது அப்படத்தினை மீண்டும் தமிழில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய்.


இப்படத்தை இயக்கப் போவது விஜய்யின் உறவுக்காரப் பெண் சினேகா.


விஜயகாந்த் நடித்த பாத்திரத்தில் நடிக்க பிரபுவின்  மகன் விக்ரம்பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். பியா, கார்த்திகா, ரீமா சென் உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தில் ரீமாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம்.


'சட்டம் ஒரு இருட்டறை'  தனக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரியாக இருக்க வேண்டும் என்பதால், போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக இருக்க, யோகா, உடற்பயிற்சி என தயாராகிவருகிறாராம் ரீமா

Tuesday, April 24

பிரசன்னா-சினேகாவுக்கு,விஜய் அஜீத் வாழ்த்து !

தமிழ் திரையுலகின் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் சினேகாவிற்கு அடுத்த மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.


பிரசன்னா - சினேகா இருவருமே தங்களது திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருக்கிறார்கள்.


பிரசன்னா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழை தானே நேரில் சென்று அளித்து வருகிறார். கமலை சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்தாராம். ' கோச்சடையான் ' படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருக்கும் ரஜினி, தமிழ்நாடு திரும்பிய உடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளிக்க இருக்கிறார் பிரசன்னா.


விஜய் மற்றும் அஜீத் இருவரையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்த பிரசன்னா, மிக சந்தோஷமாகத் திரும்பினாராம். இருவருமே தங்களது வாழ்த்துகளை பிரசன்னாவுடன் பகிர்ந்து கொண்டார்களாம். அதுமட்டுமல்லாமல், சினேகாவையும் போனில் தொடர்பு கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.


மே 11-ம் தேதி கல்யாண மண்டபத்தில் நட்சத்திர திருவிழாவைப் பார்க்கலாம்..

Monday, April 23

சந்தோஷ் சிவன் ASC !



இந்தியாவில் பல்வேறு முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரது படங்களும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ்சிவன்.


இவரது ஒளிப்பதிவினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி இருக்கிறார்கள். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.


அவருக்கு ஆசியாவில் புகழ்பெற்ற AMERICAN SOCIETY OF CINEMATOGRAPHERS- இல் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிலிருந்து ASC-ல் இணைந்திருக்கும் முதல் ஒளிப்பதிவாளர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்த படங்களைப் பார்த்து பிரபல ஒளிப்பதிவாளர் Michael Chapman (ASC) இவரது பெயரை பரிந்துரை செய்தாராம். 


ASC-ல் இணைந்திருக்கும் ஒளிப்பதிவாளர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் ASC எனப் போட்டுக் கொள்வதை மிகப் பெரிய விஷயமாகக் கொள்வார்கள். 

நண்பன்' 100 வது நாள் விழா

'நண்பன்' 100வது நாள் விழா



கமர்ஷியல் படங்களில் ரசிகர்களை மகிழ்விக்க நடித்து வந்த விஜய், வித்தியாசமான கதைக்களம் கொண்ட 'நண்பன்' படத்தில் நடித்தார்.


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் மற்றும் பலர் நடித்த அப்படத்தினை இயக்கினார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அப்படத்தினை ஜெமினி நிறுவனம் தயாரித்தது.


'நண்பன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகியுள்ளது. தமிழ்பட விமர்சகர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் படம் வரவேற்பை பெற்று இருந்தது. 2012ம் ஆண்டில் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற இடத்தினையும் பிடித்தது.


'நண்பன்' படத்தின் 100 வது நாள் விழா ஏப்ரல் 21ம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற இருக்கிறது.


இப்படத்தினை டிவி உரிமையை கடும் போட்டி இடையே வாங்கி இருக்கும் விஜய் டிவி நிறுவனம்,  இத்திரைப்படத்தினை மே 1 அன்று ஒளிபரப்ப இருப்பது குறிப்பிடத்தக்க

Wednesday, April 18

அஜீத்துடன் போட்டி நல்லது! : விஜய்





'மங்காத்தா' படப்பிடிப்பில் அஜீத்தை விஜய் சந்தித்து பேசினாரோ அன்று முதல் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள் என்ற பேச்சுகள் அவர்களது ரசிகர்களிடையே நிலவி வருகிறது.


அதனை உறுதிப்படுத்தும் விதமாக "அஜீத் எனது நண்பர்!" என்று பேட்டியளித்து இருக்கிறார் விஜய்.


அஜீத் உங்களுக்கு போட்டியா என்ற கேள்விக்கு " அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் குறித்து நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்.  நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசுவோம்.


அஜீத் வீட்டிற்கு நான் செல்வேன். அவர் என்  வீட்டிற்கு வருவார். எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.


சினிமாவில் எங்களுக்குள் கொஞ்சம்  நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. ஆனால் நிஜத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள்!" என்று தெரிவித்து இருக்கிறார்

Sunday, April 15

நாளை முதல் விஜய்யின் 'துப்பாக்கி' முன்னோட்ட படங்கள்!

9

விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முன்னோட்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை நாளை வெளியிடுகிறார் இயக்குநர் முருகதாஸும் ஹீரோ விஜய்யும்.

விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை திரையுலகை பெருமளவு பாதித்தது. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டாலும், துப்பாக்கி மட்டும் எந்தத் தடங்களும் இல்லாமல் ஜோராக முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது!

கையை விட்டு விலகாத துப்பாக்கி!

துப்பாக்கி' படத்தினை அடுத்து விஜய் கால்ஷீட் யாருக்கு என்பது கோலிவுட்டின் விடைதெரியாத கேள்வியாக இருந்தது.
'துப்பாக்கி' படத்தினை முடித்து விட்டு கெளதம் மேனன் இயக்கத்தில் யோஹன் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

' யோஹன் ' படம் குறித்து இயக்குனர் கெளதம் மேனன் " ' யோஹன் ' ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் ‘துப்பாக்கி’ முடிச்சிட்டா, ‘யோஹன்’ ஆரம்பிச்சிடலாம். இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம்.

ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. ‘யோஹன்’ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம். " என்று தெரிவித்து இருக்கிறார்

Friday, April 13

10, 12 வகுப்பு மாணவர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்

Vijay10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து அவர்களுக்கு விருந்தும் பரிசும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய், "இப்போது நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறேன்.

இதை மனதில் கொண்டு மாணவர்கள் நன்கு படித்து பரீட்சை எழுத வேண்டும். மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து, பரிசு வழங்க ஆசைப்படுகிறேன்," என்றார் விஜய்,

மாணவர்களுக்கு விஜய்யின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த ஆசையில் இன்னும் நன்றாகப் படிப்பார்களே என்ற மகிழ்ச்சி பெற்றோருக்கு!

Thursday, April 12

இளைய தளபதி' போய் 'தலைவரா'ன விஜய்!

Vijay Anthemதனக்காக ரசிகர்கள் உருவாக்கிய 'விஜய் கீதம் (Vijay Anthem)' என்ற இசை ஆல்பத்தை நேற்று வெளியிட்டு வாழ்த்தினார் நடிகர் விஜய்.

விஜய்யின் ஆன்லைன் ரசிகர்கள் பத்துப் பேர் இணைந்து இந்தப் பாடல் தொகுப்பை உருவாக்கினர்.

விஜய் ரசிகர்கள் அவரைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை. வரிக்கு வரி அவரை தலைவர் என்று புகழ்ந்து பாடலை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பாடலை வெளியிட்டுள்ள சரிகமபதநீ நிறுவனத்தின் ராஜா கூறுகையில், " இந்தியாவிலேயே ரசிகர்கள் இசையமைத்து உருவாக்கியுள்ள ஆல்பம் இதுவே," என்றார்.

நடிகர் விஜய் கூறுகையில், "வணிக நோக்கமில்லாமல் ரசிகர்கள் உருவாக்கியுள்ள பாடல்கள் இவை. என்னிடம் வந்து, இந்தப் பாடல்களை வெளியிட வேண்டும் என அனுமதி கேட்டனர். பாடல்கள் நன்றாக இருந்ததால், வெளியிட ஒப்புக் கொண்டேன். இதனை உருவாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்," என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...