இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, December 31

விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் ஜில்லா படத்துக்கு யு சான்றிதழ்!

Photo: Mohanlal & Illayathalapathi Vijay in Jilla.

Releasing on January 10th 2014
JILLA



விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் படமான ஜில்லாவுக்கு தணிக்கைக் குழு யு சான்று அளித்துள்ளது. இதன் மூலம் வரி விலக்கு, சேனல் ஒளிபரப்பு போன்றவற்றை எந்த சிக்கலும் இல்லாமல் இந்தப் படம் கடந்துவிடும் எனத் தெரிகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க விஜய் - மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள படம் ஜில்லா.

ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் படத்தை பக்காவாக முடித்துவிட்டு, தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த அதிகாரிகள், அனைவரு பார்க்கத் தகுந்ததாக உள்ளதாகக் கூறி, ஜில்லாவுக்கு யு சான்று வழங்கினர்.

இது விஜய்க்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்போதெல்லாம் யு சான்று இல்லாவிட்டால் வரி விலக்கு கிடைக்காது, டிவியில் ஒளிபரப்பவும் முடியாது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஜில்லாவை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவி என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, December 25

ஜில்லா'வில் ஜீவா!

Jilla








நேசன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும்  படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.டிசம்பர் 25ல் 'ஜில்லா' டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.டிசம்பர் 31 அல்லது ஜனவரி 1ல்  டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஜில்லா'வில் ஒரு பாடலுக்கு ஜீவா, விஜய்யுடன் சேர்ந்து ஆடி இருக்கிறாராம்.  அந்தப் பாடல் மிக அழகாக வந்திருப்பதாக விஜய் சொன்னதைக் கேட்டு, உற்சாகத்தில் இருக்கிறார் ஜீவா

Friday, December 20

பொங்கலுக்கு 'ஜில்லா' ரிலீஸ் உறுதி!

Jilla



































நேசன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும்  படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து , செனசாருக்கு அனுப்புவதற்கான  வேலைகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 25ல் 'ஜில்லா' டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.

'ஜில்லா' படத்தின் ரிலீஸ் தேதியும் நாளிதழ் விளம்பரங்களில் உறுதி செய்யப்படவில்லை. இதனால் எப்போது 'ஜில்லா' ரிலீஸ் ஆகும்?

ஒரு வேளை ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. 'ஜில்லா' டீமுடன் விசாரித்துப் பார்த்ததில். அப்படி எல்லாம் நடப்பதற்கான வாய்பு இல்லையாம்.

டிசம்பர் 31ல் டிரெய்லர் வெளியிடப்படுமாம். ஜனவரி 10ல் 'ஜில்லா' வெளியாவது உறுதியாம்

Sunday, November 17

நிலநடுக்கத்தை பார்த்தும் அசராத ஜில்லா குழு

Photo: Jilla Location Still 
https://www.facebook.com/MOVIE.JILLA
Jilla


ஜில்லா படக்குழு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வேலை செய்துள்ளனர். ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விஜய், காஜல் உள்ளிட்ட படக்குழு ஜப்பான் சென்றது அந்த நேரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ஆர்.பி. சௌத்ரி படக்குழுவினரை உடனே ஊர் திரும்புமாறு கூறினார். ஆனால் ஜப்பானில் குறிப்பிட்ட சீசனில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்து சென்ற படக்குழு ஊர் திரும்ப மறுத்துவிட்டது. இதையடுத்து தாங்கள் நினைத்தபடி பாடல் காட்சியை படமாக்கிவிட்டது தான் ஊர் திரும்பியுள்னர். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க


Saturday, November 9

விஜய் பாடிய “கண்டாங்கி.. கண்டாங்கி



ஜில்லா' படத்திற்காக மெலோடி பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் நடிகர் விஜய்.

தன் படத்தில் பாடல் பாடுவது விஜய்க்கு புதிதல்ல. 'துப்பாக்கி' படத்தில் 'கூகுள் கூகுள்', தலைவா படத்தில் “வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா..”  போன்ற பாடல்கள் பாடியது விஜய்தான். இப்பாடல்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இதையடுத்து விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரை பாட வைப்பதில் இசையமைப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது விஜய் 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு டி.இமான்தான் இசை. அவர் மட்டும் சும்மா விட்டுவிடுவாரா விஜய்யை? ‘ஜில்லா’ படத்திலும் ஒரு பாட்டு பாடியே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றுவிட்டார்.

அப்புறம் என்ன? ‘ஜில்லா’வுக்காக “கண்டாங்கி.. கண்டாங்கி” என ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து விஜய் பாடியிருக்கும் இந்தப்பாடல்தான் விஜய் ரசிகர்களுக்கு 2014ஆம் ஆண்டின் பொங்கல் வாழ்த்தாக இருக்கப்போகிறது. இந்தப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இவைதவிர, அடுத்து நடிக்கவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் விஜய் பாட இருக்கிறார். அப்படத்திற்கு இசையமைக்க இருக்கும் அனிருத், இப்போதே 'கொலவெறி' இசை போன்று ஒரு துள்ளலான இசையை தயார் செய்துவிட்டாராம்

Friday, November 8

இமானைப் பாராட்டிய விஜய்!


     

விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.

அதற்குப் பிறகு விஜய் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இமானுக்குக் கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 'ஜில்லா' படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

'மைனா', 'கும்கி', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்று தற்போது பல படங்களுக்கு ஹிட் பாடல்களை இமான் கொடுத்தார்.

விஜய் படத்தின் அத்தனை பாடல்களையும் சூப்பர் ஹிட்டாகக் கொடுத்துவிட வேண்டும் என்று படத்திற்கு 'ஜில்லா' பட பூஜை போட்ட நாள் முதலே டியூன் போடத் தொடங்கி விட்டாராம் இமான்.
 
அதோடு, தான் உருவாக்கிய டியூன்களை விஜய்யிடம் போட்டுக் காட்டி அவர் ஓ.கே செய்த டியூன்களையே பாடல்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்.

'கண்டாங்கி கண்டாங்கி' என்று தொடங்கும் பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து விஜய்யை பாட வைத்துவிட்டார்.

எனது ஹிட் பாடல் வரிசையில் 'கண்டாங்கி'  பாடல் கண்டிப்பாக இடம்பெறும் என்று சொன்னதோடு, இமானின் இசைத்திறமையையும் மனம் திறந்து பாராட்டினாராம். 

Wednesday, August 28

பத்து விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'துப்பாக்கி'


தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதான 'சிமா விருது' வழங்கும் விழா, செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது. 

சென்ற ஆண்டு தான் இந்த விருது அறிமுகபடுத்தப்பட்டது. இந்த வருட விழாவை ஆர்யா, ஸ்ரேயா, ராணா மற்றும் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். 

இதில், விஜய், காஜல் அகர்வால் நடித்த 'துப்பாக்கி' படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், நகைச்சுவை நடிகர் உள்பட 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த '3', சிறந்த நடிகர், நடிகை உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சிறந்த படம், இயக்குநர், புதுமுக ஹீரோ உள்பட 7 பிரிவுகளில் 'கும்கி' படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 'நீர்ப்பறவை' படம், சிறந்த நடிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர் உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

'வழக்கு எண் 18/9' படம், சிறந்த படம், இயக்குநர் உள்பட 5 பிரிவுகளிலும், 'பீட்சா' படம், 4 பிரிவுகளிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'சுந்தர பாண்டியன்' 5 பிரிவுகளிலும், உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' 4 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சூர்யா இரண்டு வேடங்களில் நடித்த 'மாற்றான்' 4 பிரிவுகளிலும், ஷங்கர் இயக்கிய 'நண்பன்' மற்றும் விஜய் இயக்கிய 'தாண்டவம்' ஆகிய படங்கள், சிறந்த பாடலாசிரியர் மற்றும் ஸ்டண்ட் பிரிவுகளிலும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, 'தோனி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'மெரினா', 'அட்டகத்தி' உள்ளிட்ட படங்களும் சிமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன

Monday, August 12

பெங்களூரில் சூப்பர் ஹிட் தலைவா!

தலைவா 



பெங்களூர்: தமிழகத்தில்தான் தலைவா படத்துக்கு தடை. ஆனால் பெங்களூரில் படம் பிய்த்துக் கொண்டு போகிறதாம். தமிழக ரசிகர்களும் பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்களாம். பெங்களூர் பாக்ஸ் ஆபீஸில் படம் ஹிட்டாகி விட்டதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல கூட்டம் வருவதால் பிற படங்களை தூக்கி விட்டு தலைவா படத்தைப் போட்டு வருகிறார்களாம் தியேட்டர் உரிமையாளர்கள். தலைவா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும் கூட வந்து பார்க்கிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்

Sunday, August 11

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!


விஜய் நடித்து தமிழகத்தில் மட்டும் இன்னும் வெளியாகாத தலைவா படத்தின் 3000 டிவிடிக்களை சேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் விஜய், நடிகை அமலபால், சத்யராஜ் நடித்து இயக்குநர் விஜய் இயக்கியுள்ள தலைவா படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீசாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இந்தப் படம் வெளியான இரண்டாவது நாளே டொரன்ட் உள்ளிட்ட தளங்களில் இந்தப் படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு இலவசமாகக் கிடைத்தது. இதனை டவுன்லோடு செய்து சிடியாக்கி சென்னை - புதுவை நகரங்களின் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே தலைவா புதுப்பட டிவிடிக்கள் ரகசியமாக தயாரிக்கப்படுவதாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே விஜய் ரசிகர்கள் அந்த வீடியோ சி.டி.க்கள் தயாரித்த கட்டிடம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். 3 பேர் கைது அப்போது அந்த வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தலைவா டிவிடிகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பேர்லேண்ட்ஸ் போலீசாருக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, நடிகர் விஜய் நடித்து இன்னும் வெளியாகாமல் உள்ள தலைவா படத்தை திருட்டுத்தனமாக சி.டி.க்களில் தயாரித்து கொண்டிருந்த கடையின் ஊழியர்கள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த அருள்பிரபு (36), தர்மபுரியை சேர்ந்த முரளி (28), குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சி.டி. தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் தலைவா, பட்டத்துயானை, மரியான் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட புதுப்பட சி.டி.க்கள் மற்றும் கவர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Thursday, August 1

ஆகஸ்ட் 9-ம் தேதி உலகம் முழுவதும் 'தலைவா' ரிலீஸ்!

தலைவா

விஜய் - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவா.' 'தெய்வத் திருமகள்', 'தாண்டவம்' படங்களின் இயக்குநர் விஜய் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யராஜ், சந்தானம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமிடும் படம் என்று சொல்லப்படுவதாலும், பாடல்கள் ஹிட்டாகி இருப்பதாலும் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தை இந்த மாதத்தில் வெளியிட எண்ணி விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், ரிலீஸ் தேதியை மட்டும் தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று நினைத்தனர்.

படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால், 'யு' சான்றிதழ் கிடைத்தால் 30 சதவிகிதம் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், மறுதணிக்கைக்கு அனுப்பினர்.

காரணம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்தப் படம். வரிவிலக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினாராம் தயாரிப்பாளர். சமீபத்தில் வெளியான 'மரியான்' படத்துக்கு முதலில் 'யு/ஏ' சான்றிதழ் தரப்பட்டது. அவர்கள் மறுதணிக்கைக்கு அனுப்பியதும் 'யு' சான்றிதழ் கிடைத்தது.

அவர்கள் நினைத்தது போலவே சிறிய திருத்தங்களுக்குப் பின் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே, ஆகஸ்ட் 9-ம் தேதி உலகம் முழுவதும் 'தலைவா' ரிலீஸ்!

Friday, June 21

விஜய்யை இயக்க மாட்டேன் என்று சுந்தர். சி. ஒருபோதும் தெரிவித்தது இல்லை : குஷ்பு விளக்கம்


விஜய்யை இயக்க மாட்டேன்னு சுந்தர் சி. சொன்னாரா?: குஷ்பு விளக்கம்

விஜய்யை இயக்க மாட்டேன் என்று சுந்தர். சி. ஒருபோதும் தெரிவித்தது இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார். விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 படத்திற்கு கௌதம் மேனன் புக் செய்தாலும் அவர் கதையை சொல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். படமும் கைவிடப்பட்டது. இந்நிலையில் சுந்தர் சி. தனக்கு கோர்வையாக கதை சொல்ல வராது என்றும், அதனால் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எங்கேயோ, ஏதோ குழப்பம். விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர் கூறியதே இல்லை. இருவருமே கடின உழைப்பாளிகள் என்று தெரிவித்துள்ளார்

தலைவா படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய அமலா!

தலைவா... முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய அமலா!


அசினுக்குப் பிறகு முதல் முறையாக சொந்தக் குரலில் பேசிய நடிகை என்ற 'பெருமை'யைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால். அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த படங்களில் இரவல் குரல்தான்
ஆனால் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் மட்டும் முதல் முறையாக தன் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக தொடர்ந்து நான்கு நாட்கள் இயக்குநர் விஜய்யிடம் தமிழ் ட்யூஷன் கற்றுக் கொண்டாராம் அமலா. பின்னர் எதிர்ப்பார்த்ததை விட வேகமாகவே டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அசினுக்குப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், "அமலாவுக்கு நல்ல குரல். உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. என் ஹீரோயின்கள் அனைவரும் சொந்தக் குரலில் தமிழ் பேச வேண்டும் என்று விரும்புவேன். அனுஷ்காதான் இதில் மிஸ்ஸாகிவிட்டார்," என்றார்.

Friday, June 14

நலத்திட்ட விழா ரத்தானதற்கு காரணம் யார்?

Why Did My Function Get Cancelled Explains Vijay

தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசியல் கட்சி விழா என்று யாரோ தவறான தகவல் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் விழாவுக்கு தடை போட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் ரசிகர்களும் என்னைப் போன்று பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள். என் பிறந்தநாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 3,900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நினைத்தேன். இந்த விழாவை நடத்த மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இடம் கேட்டோம். அவர்களும் அளித்தார்கள். ஆனால் நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள். பிறந்தநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை. என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்று கூறித் தான் எங்கள் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி என் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சி என்று சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதை கல்லூரி நிர்வாகம் நம்பி அனுமதி மறுத்துவிட்டது. எங்களுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி தவறான தகவல் கொடுத்துள்ளார்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கல்லூரி நிர்வாகம் நம்பவில்லை. காவல் துறையினரும் அரசியல் விழா என்று நினைத்து தான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள் போன்று. இந்த விழாவுக்காக நிர்வாகிகள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள். அது எல்லாம் அவர்களின் சொந்த பணம். விழாவில் வழங்க ஆட்டோ, கம்ப்யூட்டர், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி எல்லாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டனர். ரசிகர்களை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் செலவு செய்த பணத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். ஆனால் ஏமாற்றம் மற்றும் மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்? நடிப்பது தான் என் தொழில். ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுளும், ரசிகர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3.900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி. நான் வேறு என்ன கூற முடியுங்ணா என்றார்

Sunday, June 9

விஜய் என் தம்பி மாதிரி: மோகன்லால்

Vijay Has Lot Fans Kerala Mohanlal

இளைய தளபதி விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார். அவர் விஜய்யுடன் முதன்முதலாக சேர்ந்து நடிக்கும் படம் இது தான். இந்நிலையில் அவர் ஜில்லா பட அனுபவம் பற்றி கூறுகையில், ஜில்லா படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது. தற்போது சென்னையில் நடிக்கும் படப்பிடிப்பில் நானும், விஜய்யும் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும், எனக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது. நாங்கள் சில நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளோம். ஆனால் அதிகம் பேசியதில்லை. விஜய் என் தம்பி போல உணர்கிறேன். மனிதநேயமிக்க அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியம் அல்ல. கேரளாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்றார்

Saturday, June 8

ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய்யின் தலைவா ரிலீஸ்!

Vijay Thalaivaa On Aug 9th

விஜய் நடித்த தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது. விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. விஜய் ஜோடியாக அமலா பால், தந்தையாக சத்யரா் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முதலில் இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பட வேலைகள் முடியவில்லை. எனவே அவர் பிறந்த நாளன்று ஆடியோவை மட்டும் வெளியிடுகின்றனர். சோனி நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இப்போது பட வெளியீட்டுத் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமை வேந்தர் மூவீஸ் எஸ் மதன் பெற்றுள்ளார்

Thursday, May 23

ஜில்லா படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய மோகன் லால்!

Mohan Lal Celebrates His Birthday Jilla Shooting



மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் தனது 53வது பிறந்த நாளை விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பில் கொண்டாடினார். மலையாளத்தில் கடந்த 33 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும். மஞ்ஜில் விரிஞ்ச பூக்களில் பூர்ணிமாவுடன் ஜோடியாக நடித்தவர், 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஜில்லா படத்தில் அதே பூர்ணிமாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். மோகன்லால் மலையாளியாக இருந்தாலும், அவர் குடியிருப்பது பெரும்பாலும் சென்னையில்தான். அவரது மகன் படித்ததும் சென்னையில்தான். தமிழில் இருவர், பாப்கார்ன், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நேசன் இயக்கும் ஜில்லா படப்பிடிப்பு இப்போது சாலக்குடியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மோகன்லால் தனது பிறந்த நாளை ‘கேக்' வெட்டி கொண்டாடினார். அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்

Thursday, May 16

ஜில்லாவில் விஜய்க்கு 17 வயது 'போராளி' தங்கச்சி

Niveda Thomas Is Vijay Sister Jilla

ஜில்லா படத்தில் விஜய் தங்கையாக போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார். விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் அவர் பெயர் சக்தி. இந்த படத்தில் இளைய தளபதிக்கு அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மதுரையில் எடுக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை, அதுவும் அந்த தங்கை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம். இந்த படத்தில் விஜய்க்கு யாரை தங்கையாக போடுவது என்று அலைந்துள்ளனர். அப்போது போராளி படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண்ணாக வந்த நிவேதா தாமஸை(17) பார்த்துள்ளனர். உடனே அவரையே விஜய்க்கு தங்கையாக்கிவிட்டனர். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் தூக்கலாக இருக்குமாம். இது குறித்து நிவேதா கூறுகையில், என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாசமுள்ள தங்கையாக நடிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்

Tuesday, May 7

விஜய்யின் தலைவா... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!!!

Vijay S Thalaiva On June 22
விஜய்யின்  தலைவா

இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள். காரணம்... இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளில் வெளியிடும் திட்டம்தானாம். பொதுவாக விஜய் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்றாலும், அது பிரமாண்டமாக இருக்காது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பிக்கப் ஆகும். அவரது சமீபத்திய படங்களே இதற்கு சாட்சி. நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்த ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், விஜய் பிறந்த நாளில் படத்தை வெளியிட்டால் பெரிய வரவேற்பும், பிரமாண்ட ஓபனிங்கும் கிடைக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரி படப்பிடிப்பை வேகப்படுத்தி முடித்துள்ளார்களாம். மும்பை, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் இதன் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது ‘டப்பிங்' மற்றும் ரி-ரீக்கார்டிங் பணிகளும் முக்கால்வாசி முடிந்துள்ளதால், ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றனர். வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அதற்கு ஒரு நாள் முன்பு வெள்ளிக்கிழமை இந்தப் படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாம். முதல் நாள் விஜய் பட ரிலீஸ், அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் என டபுள் ட்ரீட் ரசிகர்களுக்கு!

Monday, April 29

விஜய் பிறந்தநாளில் தலைவா’ ரிலீஸ் !

thalaivaa release on vijay birthday
விஜய் பிறந்தநாளில் தலைவா’ ரிலீஸ் !


தலைவா படத்தின் ரிலீஸ் எப்போது என்பதுதான் இப்போதைக்கு ரசிகர்களின் கேள்வி. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பட்ட போஸ்ட் புரடெக்சன் வேலைகளை விரைவாக முடித்து, ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜூன் 21ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள் வருகிறது. விஜய் பிறந்தநாள் பரிசாக அந்த படத்தினை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் தனது ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளிக்கவேண்டும் என்பது விஜய் விருப்பமா

Thursday, April 11

தலைவா' படத்தின் FIRST LOOK TEASER இன்று முதல்!

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'தலைவா' படத்தின் FIRST LOOK TEASER இன்று வெளியாக இருக்கிறது!

Thursday, March 28

ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும்: இயக்குனர் விஜய்



இயக்குனர் விஜய்


தலைவா படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் முதன்முறையாக நடிக்கும் படம் தலைவா. துப்பாக்கிக்கு பிறகு விஜய் நடிக்கும் இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் விஜய் தலைவா படம் பற்றியும், அதில் விஜய்யை எடுத்தது பற்றியும் மனம் திறந்துள்ளார். அவர் அப்படி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

மதராஸபட்டினத்தைப் பார்த்து இம்பிரஸ்ஸான விஜய்

மதராஸபட்டினம் படத்தைப் பார்த்த இளைய தளபதி இயக்குனர் விஜயை அழைத்து நாம ஒரு படம் பண்ணுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் திட்டமாகவே இருந்தது. இந்நிலையில் தான் இயக்குனர் விஜய் இளைய தளபதியின் டேட்ஸ் வைத்திருந்த தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை சந்தித்தார். அப்புறம் என்ன திட்டம் செயல் வடிவம் பெற்றது.

கதை கேட்ட உடனே ஓகே சொன்ன விஜய்

இயக்குனர் விஜய் கதை சொன்னவுடன் 15 நிமிடம் கழித்து விஜய் ஒரு சின்ன சிரிப்பு சிரித்து கையைக் குலுக்கியுள்ளார். அதன் பிறகு பட வேலைகள் துவங்கிவிட்டன.

ஒவ்வொரு சீனும் அதிரும்ல

தலைவா படத்தில் ஸ்டைல், ஆக்ஷன், மாஸ், சென்டிமென்ட் என்று அனைத்தும் இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும் என்றார் இயக்குனர்.

Monday, March 11

ஜில்லா' படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது











நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், மஹத், தம்பி ராமையா, சூரி, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'ஜில்லா' படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.

அப்படத்தின் OFFICIAL LOGO... படப்பூஜையின் EXCLUSIVE வீடியோ இன்னும் சில மணித்துளிகளில்....

Sunday, March 10

ஜில்லா எனக்கு இன்னொரு "கில்லி"யாக அமையும்னு நம்புகிறேன்: விஜய்!

ஜில்லா


விஜய் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "தலைவா" படத்தில் நடிக்கிறார். அடுத்து அவர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் "ஜில்லா" படத்தில் நடிக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னு வெளியிடப்பட்டது. ஆர்.பி.சவுத்ரி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆர்.பி.சவுத்திரி இதனை முறைப்படி அறிவித்தார். 

"ஜில்லா"வில் விஜயக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பூர்ணிமா பாக்கயராஜ் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, பிரமானந்தம், பரோட்டா சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகத் வில்லனாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார் நட்ராஜ் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்கிறார். என்.பாஸ்கர் வசனம் எழுதுகிறார். தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ப்ரவீன்&ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்கள். ஆர்.டி.நேசன் இயக்குகிறார். மே மாதம் படப்பிடிப்புகள் சென்னையில் துவங்குகிறது.

அறிவிப்புக்கு பிறகு விஜய் அளித்த பேட்டி: சினிமாவில் என்னை உருவாக்கிய முக்கிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். பூவே உனக்காக, லவ் டுடே, ஷாஜஹான், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி படங்களில் நடித்தேன். எல்லா படங்களுமே ஹிட் படங்கள். சூப்பர்குட் பேனரில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

வேலாயுதம் படத்தின்போதே அதில் அசோசியேட் இயக்குனராக இருந்த நேசன் இந்தக் கதையை எனக்குச் சொல்லியிருந்தார். கதை பவர்புல்லாக இருந்ததால் விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று சொல்லியிருந்தேன். அது இப்போது சூப்பர்குட் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜில்லா என்பது ஒரு பகுதியை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் படத்தில் என்னை நண்பர்கள் அழைக்கும் செல்லப் பெயராக பயன்படுத்தப்படுகிறது. மதுரையை பேக்ட்ராப்பில் நடக்கும் கதை. செண்டிமெண்டும், ஆக்ஷனும் நிறைந்த கதை. இந்தப் படம் எனக்கு இன்னொரு "கில்லி"யாக அமையும்னு நம்புகிறேன் என்றார்.

Friday, March 1

துப்பாக்கி 2ஆம் பாகம் கிடையாது – முருகதாஸ்





துப்பாக்கி 2ஆம் பாகம் இப்போதைக்கு இல்லை என தெ‌ரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அ‌ஜீத்தை வைத்து படம் இயக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று முருகதாஸ் கூறியதற்கு அ‌‌ஜீத் தரப்பிலிருந்து பாஸிடிவான சமிக்ஞை வரவில்லை. இதனால் தனது பார்வையை மீண்டும் விஜய் பக்கம் திருப்பியுள்ளார்.

துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெய‌ரில் இந்தியில் முருகதாஸ் இயக்குகிறார். அக்சய் குமார் ஹீரோ. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் விஜய்யை இயக்குகிறார். ஆனால் அது துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என அவர் தெ‌ரிவித்துள்ளார்.

தற்போது தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து நேசன் இயக்கத்தில் ‌ஜில்லா படத்தில் நடிக்க உள்ளார். அதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்

தலைவா படத்தில் வடஇந்திய டிவி நடிகை





விஜய் நடிக்கும் தலைவா படத்தில் வடஇந்திய நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர்.

ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே அமலா பால் நடித்து வருகிறார். இவரைத் தவிர வேறொரு வடஇந்திய நடிகையையும் விஜய் நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியாயிருந்தன. இந்த வேடத்தை கைப்பற்ற லட்சுமிராய் முயன்றதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ராகினி என்பவரை விஜய் தேர்வு செய்திருக்கிறார்.

சத்யராஜ, சந்தானம், பொன்வண்ணன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்

மீண்டும் இனையும் விஜய் ஏஆர் முருகதாஸ்

Posted Image



மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின.

இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, "இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது," என்றார்.

முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார்.

விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்

Thursday, February 28

விஜய் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு



இன்னும் அந்த எ‌ரிமலை அணையாமல்தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயின் அரசு விருந்தினராக இலங்கையில் அசின் நடந்து கொண்டவிதம் அனைவரையுமே புண்படுத்தியது. திரைப்பட கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற அசினை தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்கக் கூடாது என்பதில் அனைவரும் தீவிரமாக இருந்தனர். 

௦மலையாள சிவசங்கர மேனன் எப்படி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தாரோ அதேபோல் மலையாளியான சித்திக் எதிர்ப்பை மீறி அசினை காவலன் படத்தில் நடிக்க வைத்து தமிழர்களின் முகத்தில் க‌ரி பூசினார். இதற்கு தமிழ் நடிகர்களும் உடைந்தை.

ச‌ரித்திரம் மீண்டும் திரும்புகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகச் சொல்லப்படும் படத்தில் அசின் ஹீரோயின் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. சென்றமுறையும் பாசிச ராஜபக்சேயின் பக்தைக்கு அடைக்கலம் தந்தது விஜய் படம்தான். இப்போதும் விஜய் படத்தில் அசின் நடிப்பதாகதான் செய்தி வெளியாகியிருக்கிறது.

இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெ‌ரிவித்துள்ளது. அசினை நடிக்க வைப்பது தமிழர்களின் மனதை புண்படுத்தும் என்பது அவர்கள் கருத்து. 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பது இன்னும் உறுதியே செய்யப்படாத நிலையில் அசினை முன்னிறுத்து கண்டனம் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது கே.வி.ஆனந்த், விஜய் இருவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Monday, February 11

தலைவா' பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ ஜி.வி!





தலைவா' படத்தில் அதிரடியான பாடல்களை உருவாக்கி வருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

விஜய்-அமலா பால் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் திரைப்படம் 'தலைவா'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். விஜய் நடிக்கும் படத்திற்கு ஜி.வி இசையமைப்பது இதுவே முதல் முறை.  இவர், ஏற்கெனவே இயக்குனர் விஜய் இயக்கத்தில் கிரீடம்,  மதராசபட்டிணம், தெய்வத் திருமகள், தாண்டவம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

'தலைவா' ஏ.எல்.விஜய்-ஜி.வி.பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும் 5வது திரைப்படம். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 3 பாடல்களுக்கு ஜி.வி டியூன் போட்டுள்ளார். தற்போது  நான்காவது பாடல் உருவாகி வருகிறது, இதனையடுத்து ஐந்தாவது பாடல் உருவாகப் போகிறதாம். இதைதவிர, படத்தில் இரண்டு தீம் பாடல்களும் இடம் பெறுகின்றன.

'தலைவா' பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ என ஜி.வி. பிரகாஷ்குமார் அவருடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளா

இன்று மாலை விஜய் வெளியிடும் ‘ஒன்பதுல குரு’ இசை!





'ஒன்பதுல குரு' திரைப்படத்தின் ஆடியோவை நடிகர் விஜய் வெளியிடுகிறார்.

வினய் ராய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், சத்தியன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ஒன்பதுல குரு. இந்தப் படத்தை பி.டி.செல்வகுமார் இயக்குகிறார். லட்சுமி ராய், அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். யுத்தம் செய் திரைப்படத்துக்கு இசையமைத்த 'கே' இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். நான்கு இளைஞர்களின் பின்னணியில் திரைக்கதை காமெடியாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வரும் 12ம் தேதி வெளியிடப்படுகிறது.

நடிகர் விஜய் கலந்துகொண்டு இந்த ஆடியோவை வெளியிடுகிறார். முன்னதாக நடிகர் விஜய்யை சந்தித்து இதற்கான அனுமதியை பெற்றிருக்கிறார் இயக்குனர் பி.டி.செல்வகுமார்

Tuesday, January 29

ஃபோர்ப்ஸ் பட்டியல்: தமிழ் நடிகர்களில் விஜய் முதலிடம்!





ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் நடிகர்களில் இவர் முதலிடம் வகிக்கிறார்.  

அண்மையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது. பிரபலங்களின் வருவாய்  மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு ஆகிவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதில் இந்தி நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். இசையமைப்பாளர்களில் முதலிடத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஒட்டுமொத்த பிரபலங்களில் 20-வது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் நடிகர்களில் விஜய் 28-வது இடத்தில் உள்ளார். சூர்யா 43வது இடத்திலும், அஜித் 61வது இடத்தையும் வகிக்கின்றனர். விக்ரம் 67-ம் இடத்தில் இருக்கிறார். 

தமிழ் நடிகர்களில் முன்னிலை வகிக்கும் விஜய்யின் ஆண்டு வருமானம் 38.46 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கூகுள் தேடல் ஹிட்ஸ், ரசிகர்களின் எண்ணிக்கை, பத்திரிகைகளின் வெளியான செய்திகளின் எண்ணிக்கை முதலானவற்றையும் கருத்தில்கொண்டு பிரபலங்களின் செல்வாக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

Thursday, January 17

தலைவா' அரசியல் படமா? விஜய் விளக்கம்

Is Thalaivaa Political Movie

தான் நடிக்கும் தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்து போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் கையசைக்கும் போஸ்டரைப் பார்க்கையில் ஏதோ அரசியல் படம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தலைவா படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய விஜய் கதை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில், தலைவா என்ற தலைப்பு படத்தின் கதைக்கும், விஜயின் இமேஜுக்கும் மகிவும் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்துள்ளோம். மேலும் போஸ்டர்களும் அதன்படி தான் டிசைன் செய்யப்பட்டன என்றார். விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் ஆனால் அதற்கு காலம் ஆகும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்

Monday, January 14

விஜயின் புதிய படத்தின் தலைப்பு 'தலைவா'






விஜய் அண்ட் விஜய், தங்களது புதிய படத்திற்கு ஒரு வழியாக தலைப்பை முடிவு செய்துவிட்டார்கள். ஆம், விஜயின் அடுத்தப் படத்தின் தலைப்பு 'தலைவா'.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சந்தானம், மனோபாலா, பொண்வன்னன் ஆகியோர் நடிக்க, மும்பை நடிகை ஒருவர் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்.

சந்திரபிரகாஷ் ஜெயின், மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்காக பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் 'தலைவா' என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது முடிந்தவுடன் பாடல் காட்சிகளை படமாக்க ஸ்பெயின் செல்ல இருக்கிறார்கள்

Friday, January 11

மீண்டும் விஜய்- காஜல் அகர்வால் கூட்டணியில் ‘ஜில்லா’



துப்பாக்கி’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் விஜய் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கு பிறகு விஜய், புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார். 

அப்படத்திற்கு ‘ஜில்லா’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இயக்குனர் நேசன் ‘ஜெயம்’ ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இருவரும் இணையும் இரண்டாவது படம் இது. 

ஏற்கெனவே ‘துப்பாக்கி’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். மேலும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Thursday, January 10

கமலின் நாயகனுக்கு பிறகு விஜயின் துப்பாக்கிக்கு கிடைத்த பெருமை


ஐஎம்டிபி என்னும் உலகப் புகழ்பெற்ற சினிமா இணையதளம் விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு 10க்கு 8.3 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.
ஐஎம்டிபி என்னும் உலகப் புகழ்பெற்ற சினிமா இணையதளம் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் உள்பட பல உட் படங்களுக்கு தனது இணையதளத்தில் மதிப்பெண்கள் அளிக்கும். அதில் எந்த படம் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறதோ அது கண்டிப்பாக ஹிட் என்றே கூறலாம். இந்த இணையதளம் பற்றி அறிந்தவர்கள் ஒரு படம் ரிலீஸானதும் அதைப் பார்க்கலாமா, வேண்டாமா என்பதை ஐஎம்டிபி அளிக்கும் மதிப்பெண்களை வைத்தே முடிவு செய்கின்றனர்.
ஐஎம்டிபியும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு படத்திற்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்துவிடாது. அதனால் அது அதிக மதிப்பெண்கள் அளிக்கும் படத்தை நம்பிப் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஐஎம்டிபியிடம் அதிக மதிப்பெண்கள் வாங்கிய 3 இந்திய படங்களில் 2 கோலிவுட் படங்கள் அடக்கம் என்று உங்களுக்கு தெரியுமா?


கமலின் நாயகன்

Posted Image




வேலு நாயக்கராக கமல் ஹாசன் நடித்து 1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு ஐஎம்டிபி 10க்கு 8.3 மதிப்பெண்கள் வழங்கியது. நாயகன் சூப்பர் ஹிட் என்று உங்களுக்கே தெரியும்.



ஆமீர் கானின் 3 இடியட்ஸ்




Posted Image



நாயகனுக்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2009ம் ஆண்டு ரிலீஸான ஆமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்திற்கு தான் ஐஎம்டிபி 8.3 மதிப்பெண்கள் அளித்தது. 3 இடியட்ஸ் வசூலை அள்ளிக் குவித்த படமாகும்.




விஜயின் துப்பாக்கி




3 இடியட்ஸுக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2012ல் வெளியான விஜயின் துப்பாக்கி படத்திற்கு தற்போது ஐஎம்டிபி 8.3 மதிப்பெண்கள் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Posted Image


துப்பாக்கி இயக்குனர் முருகதாஸ் தனது படத்திற்கு கிடைத்துள்ள மதிப்பெண்கள் பற்றி அறிந்ததும் படுகுஷியாகிவிட்டாரம். இருக்காத பின்ன, எவ்வளவு பெரிய கௌரவம்











Wednesday, January 9

சென்னை எக்ஸ்பிரஸுக்காக 'விஜய்' கெட்டப்புக்கு மாறிய ஷாருக்கான்

Shahrukh Wears Dhoti Chennai Express


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக நம்ம விஜய் ரேஞ்சுக்கு வேட்டி கட்டி, கூலிங் கிளாஸ் போட்டு, கண்ணைப் பறிக்கும் மஞ்சள் கலரில் சட்டை அணிந்து ஒரு போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். இிதில் தீபிகா தமிழ் பெண்ணாக வருகிறார். அவருக்கு தந்தையாக சத்யராஜும், அத்தையாக மனோரமாவும் நடிக்கின்றனர். ரயில் பயணத்தின்போது தீபிகாவை சந்திக்கும் ஷாருக் அவர் மீது காதல் வயப்படுகிறார். ரயிலில் தீபிகா தமிழில் பேச, அர்த்தம் புரியாமல் பதிலுக்கு ஷாருக் இந்தியில் பேச என்று ஒரே காமெடியாக இருக்கும்படி படமாக்கியுள்ளனர். தமிழ்ப் பெண்ணை காதலித்தால் நம்ம ஊர் ஆடை அணிய வேண்டும் அல்லவா. இத்தனை நாட்களாக கோட், சூட்டில் வந்த ஷாருக் இந்த படத்தில் வெள்ளை வேட்டி, மஞ்சள் கலர் சட்டை, கூலிங் கிளாஸ், கையில் பெரிய பிரேஸ்லெட், கழுத்தில் கெட்டியான சங்கிலி என்று ஒரு மார்க்கமாகத் தான் வருகிறார். அவரது போட்டோவைப் பார்த்தவுடன் ஒரு வேளை அவர் விஜயை காப்பியடித்து டிரஸ் பண்ணியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

Wednesday, January 2

விஜய் துப்பாக்கி 50 வது நாள்




ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி நடித்த படம் துப்பாக்கி. 2012ம் ஆண்டில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படம். பாக்ஸ் ஆபீஸிலும் சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு அடுத்தபடியாக 100 கோடி வசூல் சாதனை செய்த படம். இந்த படம் அணைத்து அம்சத்தையும் கொண்டுள்ளது. இளையதளபதியின் ஸ்டைல், காஜலின் இளமை, ஏ.ஆர்.முருகதாஸின் திகிலூட்டும் திரைக்கதை, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மற்றும் ஹாரிஸின் இசை அனைத்தும் இப்படம் வெற்றியாக ஓடுவதற்கு முக்கிய காரணங்கள்.

இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் மூன்று வாரங்களை தாண்டுவதே மிகவும் கடினமான காரியம், காரணம் அந்த அளவுக்கு மக்கள் ரசனையில் மாற்றாம், மேலும் புதுப்புது திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன, இதனால் போட்டி அதிகமாக உள்ளது. ஆனால் இந்த பேச்சுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் துப்பாக்கி புது வருடத்தின் முதல் நாளில் 50வது நாளை கடக்கின்றது.

மேலும், கேரளா விஜய் ரசிகர்கள் 50தாவது நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்ந்துள்ளனர்

Related Posts Plugin for WordPress, Blogger...