




தீபாவளிக்கு இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கிறது. அதற்குள் வெடி வெடிக்க கிளம்பியிருக்கிறார் விஷால். இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் வெடி, இம்மாதம் 30 ந் தேதி ரிலீஸ். கொஞ்சம் பொறுத்திருந்தா தீபாவளிக்கே வந்திருக்கலாமே என்றோம். இப்போ வரப்போகிற லீவ் நாட்களையும் மனசுல வெச்சுகிட்டுதான் இப்போ ரிலீஸ் செய்யுறோம் என்றார். (நவராத்திரி லீவ், மற்றும் காலாண்டு விடுமுறை என்று கணக்கு பண்ணி களம் இறங்கியிருக்கிறார்கள்).
தீபாவளிக்கு புதுப்படங்கள் வரும்போது வெடி காணாமல் போய்விடுமே என்றால், இல்ல பாஸ். நிஜம் என்னன்னா எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் ரெண்டே வாரம்தான் தாங்குது. அதுமட்டுமல்ல, சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் பண்ணியிருக்கோம். இதே ரேஞ்சில்தான் தமிழகம் முழுக்க வெளியிட்டிருக்கிறோம். கலெக்ஷன் பிரமாண்டமா இருக்கும் என்றவர், அதன்பின் பேசியது எல்லாமே வெடியை சுற்றிய விஷயங்கள்தான்.
தெலுங்கில் வெற்றி பெற்ற எந்தவொரு படத்தையும் நான் ரீமேக் பண்ணனும்னு நினைப்பேன். அதையும் மீறி வேறு யாராவது ஹீரோ அந்த படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகிட்டா என்னால தாங்கவே முடியாது. உறக்கமே வராது. அப்படி கை நழுவிப்போச்சே என்று நான் கவலைப்பட்ட படம் சந்தோஷ் சுப்ரமணியம். ஜெயம் ரவி என்னோட பெஸ்ட் பிரண்டுன்னா கூட, பொறாமையா இருந்திச்சு. தெலுங்கில் சவுரியம் வந்தபோதும் நான் அப்படிதான் ஃபீல் பண்ணினேன். இந்த படத்தை தமிழ்ல நாம பண்ணனும்னு தோணுச்சு. ரைட்ஸ் வாங்கியதும் நான் நினைச்ச ஒரே டைரக்டர் பிரபுதேவா மாஸ்டர்தான்.
சவுரியம் படத்தை விட இதை ரொம்ப அற்புதமாக திரைக்கதை அமைச்சு இயக்கியிருக்கிறார். அவன் இவன் படத்தில் நடித்த பின்பு என்னோட பர்ஃபாமென்ஸ் பற்றி ரசிகர்கள் நிறைய பேசினாங்க. இந்த படம் அந்த நல்ல பெயரை காப்பாற்றி கொடுக்கும். அதுமட்டுமல்ல, அந்த படத்திற்கு இணையா இதில் பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன் என்றவரிடம் நீங்க எப்போ டைரக்டராக போறீங்க என்றோம். அதற்கு அவர் சொன்ன பதில், இன்டஸ்ட்ரியையே திரும்ப வைக்கிற பதில்.
விஜய்க்காக ஒரு கதை வச்சுருந்தேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். அவர் சம்மதிச்சா இப்பவும் நான் ரெடி என்றார். இனிமேல் இது பற்றி விஜய்தான் சொல்லணும்…
இளையதளபதி விஜய்யின் பிள்ளைகளும், தல அஜீத் குமாரின் மகளும் குளோஸ் நண்பர்களாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருகின்றனராம். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வேலாயுதம்’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இதன் ரிலீஸ் தேதியை தற்போது மாற்றி அறிவித்துள்ளனர் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா மோட்வானி ஆகியோர் நடித்துள்ளனர். விஜயின் பாசமிகு தங்கையாக சரண்யா மோகன் நடித்துள்ளார் இப்படம் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் 25-ம் தேதியே திரைக்கு வருகிறதாம்


எம்.ஜி.ஆர் பாணியில் தனது படங்களுக்கு தலைப்பு வைத்து வந்த விஜய்,
எம்.ஜி.ஆருக்கு திருப்பு முனையாக அமைந்த படங்களின் புகழ்பெற்ற லொக்கேஷன்கள் மீதும், தனது செண்டிமெண்ட் பார்வையைத் திருப்பியிருகிறார்.


ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தினை, தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர். இப்படத்தில் இலியானா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் ஆடியோ ரிலீஸ் ஆகும் தேதி உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் அநேகமாய் அக்டோபர் 10-ம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இப்படத்தில் சத்தியராஜ், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்களாம்.





பொதுவாக நடிகைகள் இடையே போட்டி, பொறாமைகள் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரே படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் சேர்ந்து நடித்தால் கேட்கவா வேண்டும்.
விஜய் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கி விரைவில் வெளிவர இருக்கும் “வேலாயுதம்” படத்தில் தான் நடிகை ஜெனிலியாவும், ஹன்சிகா மோத்வானியும் யார் பெரியவர்கள் என்று மோதிக் கொண்டார்களாம்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜா கூறுகையில், ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ஈகோ இருந்தது உண்மைதான். ஆனால் அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும் போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.
ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
ஆனால் பிரச்சினை எதுவும் இல்லை. படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது.
மேலும் விஜய் குறித்து கூறும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு “எங்க வீட்டு பிள்ளை” போல், கமலுக்கு “தசாவதாரம்” போல், விஜய்க்கு “வேலாயுதம்” படம் அமையும் என்று கூறினா



விஜய்யுடன் தற்போது ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா மோட்வானி, அதே சமயத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படங்களுக்குப் பிறகு இவர் தமிழில் எந்த படங்களையும் ஒத்துக் கொள்ளவில்லை.
காரணம் என்னவென்று நடிகையின் தரப்பில் விசாரித்துப் பார்த்தால், ‘தமிழிலே துட்டு அவ்வளவா வெட்ட மாட்டேன்கிறார்கள்.
தெலுங்கிலோ பாப்பாவுக்கு நிறைய துட்டு வெட்டறோம்னு சொல்லிருக்கிறார்.அதான் ஹன்சி பாப்பா தெலுங்குக்கு ஜம்பாகி இருக்கு’ என்றார்கள்.



இளைய தளபதி விஜய் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படம் நண்பன், தமிழ் சினிமா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் இளைய தளபதி உட்பட ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என அனைவரும் பயங்கர லூட்டி அடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவுற்றதை கொண்டாட இளைய தளபதி விஜய் பார்ட்டி ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டியில் இளைய தளபதி உட்பட ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என அனைவரும் நடனம் ஆடி அசத்தினார்களாம். அதுமட்மின்றி, படத்தில் விஜய் புதியதொரு தோற்றத்தில் தோன்றுகிறாராம் என பட வட்டாரங்கள் தெரிவிகின்றன. நண்பன் வரவிருக்கும் 2012 பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது.


நடிகர் விஜய்யின் ‘வேலாயுதம்’, மற்றும் ‘நண்பன்’ படங்களைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குபவர் சீமானா, ஏ.ஆர்.முருகதாஸா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனோடு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில், விஜய்யின் ஜோடியாக பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கிங்பிஷர் நிறுவனத்தில் மாடலான ஏஞ்சலா ஜான்சன் என்பவரை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் வரும் அக்டோபர் மாதம் தனது ஷூட்டிங்கை துவங்க இருக்கிறதாம். இந்த ஏஞ்சலா ஜான்சன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயைப் போல் இருப்பாராம். இவர் ஒரு ஹிந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்

எப்போதும் ஷங்கர்... 'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக! '' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?'' '' 'எந்திரன்’ ஷூட்டிங்கின் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. படம் பார்த்துட்டு வெளியே வந்தா... மனசு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருந்தது. உடனே, என் மனைவிகிட்ட 'படத்தை மிஸ் பண்ணாம பாரு’னு போன்ல சொன்னேன். அவங்க திரும்பத் திரும்ப குடும்பத்தோட மூணு தடவை பார்த்தாங்க. சிம்பிள் சினிமா... ஆனா, கிரேட் ஃபிலிம். படத்தை எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பண்ணிரணும்னு தீர்மானிச்சேன். ஆனா, டைரக்ட் பண்ற வாய்ப்பும் கடைசியில் என் கைக்கே வந்தது ஆச்சர்யம்.
'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்... வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!'' ''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்போ பார்த்த விஜய்... இப்போ இல்லை. அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?'' ''விஜய் இப்போ செம புரொஃபஷனல். பக்கா டிசிப்ளின். எந்த நேரம், எந்த ஸீன் எடுக்கணும்னு சொன்னாலும்... கச்சிதமா வந்து நிற்பார். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, ஒரு டைரக்டர் எவ்வளவு பெரிய கேன்வாஸுக்கும் கற்பனைகளை விரிக்கலாம். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா அவரைப் பார்த்ததைவிட, இப்போ அவர்கிட்ட அபாரமான வளர்ச்சி. அவரை இந்தப் படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும். என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். நான் ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றேன்!''
'' 'நண்பன்’ ஆரம்பிச்ச சமயத்தைக் காட்டிலும் இப்போ ஜீவாவுக்கு இமேஜும் மார்கெட் வேல்யூவும் எகிறி இருக்கு. அவரது பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு?'' ''ஜீவாவின் நடிப்பு துல்லியம். மீட்டர் அவ்வளவு கச்சிதமா இருக்கும். ஒரு பாயின்ட் அதிகமா இருக்காது, குறைவா இருக்காது. முதல் ஸீனில் இருந்து கடைசி வரை ஒரே அளவுதான். 'நீங்க மோகன்லால், மம்முட்டி சேர்ந்த குட்டிக் கலவை’னு அவர்கிட்ட சொன்னேன். இப்போதைய டிரெண்டுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். ஆக்டர்னு துளி பந்தா கிடையாது. ஏதோ கார்பரேட் ஆபீஸ் போற மாதிரி இருப்பார். ஸ்வீட் பாய்!'' ''இந்த செட்டில் ஸ்ரீகாந்த்... ஆச்சர்யமா இருந்தது...'' ''கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். ஜாலியான - ஆனால், அப்பாவுக்குப் பயந்த பிள்ளையா, காலேஜ் படிக்கிற குழந்தை மாதிரி நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். முதல் ஸீனில் இருந்தே இந்த த்ரீ இடியட்ஸ் பின்னாடி டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!''
'' 'சிங்கிள் சிங்கம்’ ஹீரோக்களை வெச்சுதான் உங்கள் மாஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து இருக்கீங்க. இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் உங்களை சிரமப்படுத்துச்சா?'' ''முன்னாடி பண்ண படங்களைக் காட்டிலும் இது ரொம்பவே ஈஸியா இருந்தது. அவங்க மூணு பேரை மட்டும் பார்க்காதீங்க. படத்தில் நடிச்ச ஒவ்வொருவருமே ஒரு ஸ்டார்தான். 'சிவாஜி’, 'எந்திரன்’ ரெண்டு படத்துக்கும் சத்யராஜ் சார்கிட்ட போனேன். அவரால் நடிக்க முடியலை. இந்தப் படத் துக்கு கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா. இரண்டே ஸீன் வந்தாலும் பரபரக்கவைப்பார். இலியானாவுக்கு எவ்வளவு பெரிய கிரேஸ் இருக்குன்னு தெரியும். இவங்க எல்லாரும் உங்க முன்னாடி அழகழகா வந்து நிப்பாங்க!'' ''விஜய் கேரக்டருக்கு சூர்யா, சிம்புனு ஆரம்பத்தில் பெரிய மியூஸிக்கல் சேர் விளையாட்டே நடந்ததே... என்ன பிரச்னை?'' ''பொதுவா எல்லாப் படத்துக்கும் அப்படி வர்றதுதானே! சில நடிகர்களைப் பரிசீலிப்போம். அவங்க கால்ஷீட், சம்பளம் எல்லாம் பொறுத்துத்தானே ஃபிக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லாமே செட் ஆகணும். அதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, படம் ஆரம்பிச்சுட்டு பிரச்னைன்னா... கஷ்டம். இப்போ, ஆல் இஸ் வெல்!''
''ஒரிஜினலில் நடிச்ச மாதவன், 'தமிழில் த்ரீ இடியட்ஸ் எடுத்தால் அஜீத், விஜய், விக்ரம் நல்ல சாய்ஸ்’னு விகடன் பேட்டியில் சொல்லி இருந்தார். அது இன்னும் நல்லா இருந்திருக்குமோ?'' ''சரிப்பட்டு வர்றதைத்தான் யோசிக்கணும். இத்தனைக்கும் நானே 'ஒய் நாட்?’னு கேட்டு முடிவு எடுக்கிற ஆளு. சில விஷயங்களை யோசிக்கவே கூடாது. அது, பேச நல்லா இருக்கும், எழுத நல்லா இருக்கும். ஆனா, யதார்த்தத்துக்குச் சரி வராது!'' ''ரீல் 'இந்தியன் தாத்தா’ ரியல்ல வந்த மாதிரி அண்ணா ஹஜாரே தூள் கிளப்பிட்டு இருக்கார். இப்போ 'இந்தியன் பார்ட் 2 எடுக்கலாமே..?''
இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?'' ''தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் எப்படி இருக்கு?'' ''திடீர்னு வசந்தபாலன் எஸ்.எம்.எஸ். பண்ணினான், 'ஆரண்ய காண்டம் மிஸ் பண்ணாதீங்க’னு. இப்பல்லாம் ஒரு படம் ஹிட் ஆகணும்னா... 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ ஆக இருக்கணும். எல்லாருக்கும் பிடிக்கணும். ஏதோ ஒண்ணு குறைஞ்சாலும் இடிக்குது. 'ஆரண்ய காண்டம்’ இன்னும் ஓடி இருக்கணும். ரூம் போட்டு யோசிச்சாக்கூட, ஜனங்களின் மனசு புரியலை. சுஜாதா அடிக்கடி சொல்ற மாதிரி... அது ஒரு தங்க விதி. இவ்வளவு வருஷமா இங்கே இருக்கேன். எனக்கும் இப்போ வரை எதுவுமே புரியலை!'' ''ரஜினி உடல்நிலை பத்தி விசாரிச்சீங்களா?'' ''ஒருநாள் திடீர்னு ஐ.எஸ்.டி. நம்பர்ல இருந்து கால். ரஜினி சாரா இருக்குமோனு நினைச்சு அட்டெண்ட் பண்ணா... ரஜினியேதான்! 'நல்லாயிட்டேன் ஷங்கர். ஃப்ரீயா சந்திக்கலாம். 'நண்பன்’ பார்க்க ஆசையா இருக்கேன்’னு சொன்னார். 17-ம் தேதி போன் பண்ணி 'ஹேப்பி பர்த் டே’ சொன்னார். அவர் சௌகரியமாகி, அவருக்கு சௌகரியமா இருக்கும்போது... பார்க்கலாம்!'' |