இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, September 16

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகன் மரணம்



விபத்தில் காயமடைந்த காங்கிரஸ் எம்.பி. அசாருதீன் மகன் நேற்று காலை இறந்தார். இந்திய கிரிக்கெட்
அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் எம்.பி.யுமான அசாருதீனின் மகன் அயாசுதீன், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கினார். 19 வயதான அயாசுதீனும், அசாருதீன் சகோதரியின் மகன் அஜ்மல் (16) என்பவரும் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென கவிழ்ந்ததில் அஜ்மல் இறந்து விட்டார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய அயாசுதீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலை, மார்பு, வயிறு ஆகிய இடங்களில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால் அபாய கட்டத்தில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அயாசுதீன் நேற்று காலை இறந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும்,

ஆந்திரா முதல்வர் கிரண் குமார் ரெட்டி மருத்துவமனை சென்று அயாசுதீன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அயாசுதீன் ஐதராபாத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லூரியில் படித்து வந்தார். அப்பாவை போல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். ஸ்டேட் வங்கியின் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தார்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...