
Monday, September 19
காஷ்மீரில் விஜய் பட ஷுட்டிங் !
11:18:00 AM
No comments
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மூவரும் இடம் பெறும் பாடல் காட்சியை படமாக்க காஷ்மீர் சென்று இருக்கிறது 'வேலாயுதம்' படக்குழு. படத்தில் ஒரு பாடலில் இரு நாயகிகளும் இடம் பெறுகிறார்களாம்.
முதலில் ஸ்விட்சர்லாந்தில் தான் இந்த பாடலை படமாக்க திட்டமிட்டார்களாம். இறுதியில் காஷ்மீர் ஸ்ரீநகர் அருகில் உள்ள டால் ஏரியின் அருகில் படப்பிடிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதி அங்கு சென்று இருக்கிறார்கள்.
செப் 21 வரை அங்கு பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்பாடலை தவிர மீதி படப்பணிகள் அனைத்தும் முடிந்து தயாராக இருக்கிறதாம்.
அக்டோபர் 26ம் தேதி தீபாவளி தினத்தன்று 'வேலாயுதம்' திரைக்கு வர இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment