
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமான “நண்பன்” பட சூட்டிங்கில் நடிகை இலியானா கால் முறிந்தது. பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக “நண்பன்” படத்தில் நடிக்கிறார். ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். “நண்பன்” பட சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலியானா ஆடும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது. பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப்பயிற்சியை அளித்தார்அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். கால் சரியாக மூன்று வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து இலியானா ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். இலியானா தவிர்த்த காட்சிகள் மற்றும் பேட்ச் ஒர்க்கை மட்டும் இப்போது ஷங்கர் மேற்கொண்டு வருகிறார்













0 Comments:
Post a Comment