
சினி ஸ்டார்களை வைத்து ஃபாஷன் ஷோ நடத்துவது மும்பையில் மட்டும் நடந்து வந்தது. இப்போது சென்னைக்கும் பரவிவிட்டது. கடந்த வாரம¢ நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமலாபால், சினேகா இருவரும் கலந்துகொண்டு பூனை நடை நடந்து வந்தார்கள். டீ ஷர்ட், ட்ராக் பேண்ட்ஸில் நிகழ்ச்சிக்கு வந்த அமலா, அடுத்த நொடியில் அட்டகாசமான புடவைக்கு மாறிவிட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை சந்திக் கலாம் என்று பத்திரிகையாளர்கள் காத்திருக்க, இருவரும் ரகசியமாய் எஸ்கேப். என்ன அவசரமோ?
நடிகர் ஜீவா புதிதாகத் திறந்துள்ள ‘ஒன்.எம்.பி.’ ஹோட்டல் திறப்புவிழாவிற்கு வந்த ஷங்கர் பிரமித்தார். காரணம், உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் கையேந்திபவன் போல அமைத்திருந்த செட். ‘‘ஜீவா இந்தியாவிலிருக்கும் முக்கிய நகர ஹோட்டல்களுக்குப் போய் உணவை டேஸ்ட் பண்ணி அதையெல்லாம் ஒரே இடத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்த உழைப்புக்கு நான் மரியாதை செய்யணும்னு நினைச்சு வந்தேன்’’ என்று சொன்ன ஷங்கர், எல்லா ஐட்டங்களையும் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுப் பார்த்தார்













0 Comments:
Post a Comment