இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, October 11

விஜய் மீது எப்பவும் தனி விருப்பம், பிரியங்கா சோப்ரா





நடிகர் விஜய் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

உலக அழகியாக தேர்வான பிரியங்கா சோப்ராவுக்கு நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்தது தமிழ் சினிமா தான். அவர் முதன்முதலாக இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து தமிழன் படத்தில் நடித்தார். அது தான் அவர் நடித்த முதல் படம். அதன் பிறகு தான் பாலிவுட் கண்கள் பிரியங்கா மீது பட்டது. தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.


அவருடன் ஜோடி சேர பல ஹீரோக்கள் காத்திருக்கையில் பிரியங்கா விஜயுடன் ஜோடி சேர விரும்புகிறார்.


அண்மையில் சென்னையில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்த பிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது,


என்னை கோலிவுட் தான் அறிமுகப்படுத்தியது. எனது முதல் படத்தின் ஹீரோ விஜய். அவர் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. தமிழ் ஹீரோக்கள் பலரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் பலமடங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெளியான தமிழ் படங்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.


எனக்கு தமிழ் படங்களில் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கத் தான் ஆசை. அது நிறைவேறினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்றார்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...