
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் நடித்து ராஜா இயக்கத்தில் 45 கோடி செலவில் வெளிவரும் பக்கா கமெர்சியல் படம் வேலாயுதம்.
தமிழ் நாட்டில் பெரிய தியேட்டர் களை ஒவ்வொன்றாக பார்த்து உதயநிதி தன் படமான 7ம் அறிவுக்கு புக் பண்ண வேலாயுதம் படத்திற்கு அடுத்த படியான தியேட்டர்களே கிடைத்திருகிறது. இதனால் முற்பதிவு பாதிக்கபட்டிருகிறது. ஆனாலும் அனைத்து காம்ப்ளெக்ஸ் களிலும் வேலாயுதம் திரையிடப்டுகிறது. சென்னையில் ஆரம்பத்தில் 38 தியேட்டர் களை பெற்றிருந்த வேலாயுதம் இன்று மேலும் 12 திரைகளை பெற்று 50கு முன்னேறி இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருகிறது.
7ம் அறிவுக்கு இதுவரை சென்னையில் 52 தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதற்க்கான முற்பதிவுகள் மூன்று நாட்களுக்கு முதல் ஆரம்பித்து முதல் 2,3 நாட்களுக்கான டிக்கெட் விற்றுதீந்து விட்டது. வேலாயுதம் முற்பதிவுகள் வார இறுதியில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது
சென்னை தவிர்ந்த ஏனைய இடங்களிலும் இரண்டு படத்துக்கும் ஆன போட்டி ஆரம்பித்துவிட்டன. 7ம் அறிவுக்கு தெலுங்கு பதிப்புடன் சேர்த்து 1100 பிரிண்ட் உலகம் முழுவதும் போடப்படுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். சூர்யா+ முருகதாஸ் கூட்டணிக்கு கஜனி என்ற வெற்றிப்படம் கொடுத்ததால் எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. , வேலாயுதம் படம் கேரளாவில் 120 தியேட்டர் களிலும் கர்நாடகாவில் 100 திடேர்களிலும் மொத்தமாக 1300 பிரிண்ட் உலகம் முழுவதும் போடப்படுள்ளதாக படத்தை வெளியிடும் அயிங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.. இது விஜய் படத்திற்கு புதிய சாதனை. காவலனுக்கு கிடைத்ததை விட இது இருமடங்காகும். தொடர்ந்து ஹிட் படம் கொடுத்த ராஜா படத்தை இயக்கியிருப்பதாலும், விஜய் இப்போது கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதாலும் ஒரு வருடத்திருக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்த வேலாயுதம் படத்திக்கு எதிர்ப்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் உள்ளது

ஐரோப்பாவில் , இங்கிலாந்தில், அமெரிக்காவில் 7ம் அறிவை விட வேலாயுதத்திற்கு அதிக தியட்டர்கள் கிடைத்துள்ளது. இலங்கையில் 13 திரைகளில் வேலாயுதம் திரையிடப்படுகிறது. இது இன்னும் அதிகரிக்கலாம். தீபாவளிக்கு 2 நாட்கள் முந்தியே ஸ்பெஷல் ஷோ போடப்படுவது இதுவே உலகில் முதல் முறை.














0 Comments:
Post a Comment