இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, October 18

பப்' போகணும்... ஆனா எல்லை மீறக் கூடாது! - ஜெனிலியா ஆசை

Geneliaபப், பார்ட்டி என ஜாலியாக இருக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் எல்லை மீறக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன், என்கிறார் நடிகை ஜெனிலியா.

விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறார் ஜெனிலியா. காரணம் இந்தப் படத்துடன் அவர் தமிழில் நடிக்க மாட்டார் என்றும் திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது.

படம் வெளியாவதையொட்டி பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஜெனிலியா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நான் நடித்துள்ள படங்களில் முதல் மாஸ் படம் என்றால் அது வேலாயுதம்தான். விஜய்யுடன் சச்சினில் நடித்திருக்கிறேன். இப்போது வேலாயுதம். ரொம்பப் பெருமையாக உள்ளது.

நான் ரொம்ப சிம்பிளான பொண்ணு. நிறைய பேர் பப், பார்ட்டிகளுக்கு போகிறார்கள். எனக்கும் அங்கெல்லாம் போக பிடிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயங்குவதில்லை. ஆனால் எல்லை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

என் தோழி நயன்தாரா

சினிமாவில் நிறைய சினேகிதிகள் உள்ளனர். ஆனால் எனக்கு நெருங்கிய தோழியாக இருப்பவர் நயன்தாரா. சொந்த விஷயங்களை மனம்விட்டு இருவரும் பேசிக் கொள்வோம். ரகசிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். திரையுலக உள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். எங்களுக்குள் ஒளிவு மறைவில்லை.

நான் கிறிஸ்தவ பெண். ஞாயிற்றுக்கிழமைதோறும் தவறாமல் சர்ச்சுக்கு போகிறேன். அங்கு மன அமைதி கிடைக்கிறது.

இண்டர்நெட், ட்விட்டரில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். பிருதிவிராஜூம் டுவிட்டரில் எனக்கு நண்பராக இருக்கிறார்.

திருமணம்...ம்ம்... அதெல்லாம் அப்புறமா விரிவா பேச வேண்டிய விஷயம்," என்றார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...