தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல், நேற்று முன்தினம் சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. ஓய்வுபெற்ற, உச்சநீதிமன்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில், அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து தேர்தலை நடத்தி வைத்தார். நேற்று முன்தினமும், நேற்றும் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை பிலிம் சேம்பர் வளாகத்தில், புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவருக்கும் பத்மநாபன் சான்றிதழ் வழங்கினார். சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன், துணை தலைவர்களாக சத்யஜோதி தியாகராஜன், டி.சிவா மற்றும் செயலாளர்களாக பி.எல்.தேனப் பன், கே.முரளிதரன் பொருளாளராக கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் வெற்றி பெற்றனர். 21 செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், எடிட்டர் மோகன், கோவைத்தம்பி, ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார், சங்கிலி முருகன், வி.சேகர், ஆபாவாணன், சித்ரா லட்சுமணன், பவித்ரன், ராதாரவி, கருணாஸ், அமுதா துரைராஜ், எச்.முரளி, ஆர்.மாதேஷ், கே.ராஜன், ஷக்தி சிதம்பரம், கே.பாலு, விஜயமுரளி, எம்.கபார், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிய தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகரனுக்கு கேயார் வாழ்த்து தெரிவித்தார். பிறகு எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது: சங்க தேர்தலில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். தேர்தல் முடிவு வருவதற்கு முன்தான் எதிர், எதிர் அணி. இப்போது தீர்ப்பு வந்து விட்டது. இனி எல்லோரும் ஒரே அணி. தயாரிப்பாளர் சங்கத்தில் ஏதாவது தவறு நடந்து இருந்தால், அதை விசாரிக்க ஒரு குழு அமைத்து, அந்த குழு என்ன முடிவு செய்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதி கொடுத்தேனோ, அவற்றை எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். தயாரிப்பா ளர் சங்கத்தை கார்ப்பரேட் கம்பெனி போல மாற்றித் தருமாறு சத்யஜோதி தியாகராஜனிடம் கேட்டுள்ளேன். இன்னும் 6 மாதத்தில் சொன்னதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். தயாரிப்பாளர் சங்கத்துக்காக, 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புது அலுவலகத்தை முக்தா சீனிவாசன் திறந்து வைக்க வேண்டும். யாருடனும் கருத்து வேற்றுமை கொள்ளாமல், தயாரிப்பாளர்களின் நலனுக்காக பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார். பிறகு கேயார், முக்தா சீனிவாசன் உட்பட பலர் பேசினர். 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பவித்ரன் தொகுத்து வழங்கினார்
Monday, October 10
திரைப்பட தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
11:53:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment