இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, October 27

வேலாயுதம் பட திரை விமர்சனம் ஒரு சிரப்பு பார்வை









Starring : விஜய், ஜெனிலியா, ஹன்சிகா
Direction : ஜெயம் ராஜா
Music : விஜய் ஆண்டனி
Production : வேணு ரவிச்சந்திரன்



விஜய் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்து போகிறார்களோ அது கண்டிப்பாக கிடைக்கும். காமெடி, பஞ்ச் டயலாக், தூள் பறக்கும் சண்டை காட்சிகள், எழுந்து ஆடத்தோன்றும் பாடல் மற்றும் டான்ஸ் என்று படம் பார்க்க வந்த அனைவரையும் திருப்தி படுத்தும் நோக்க்கோடு படத்தை எடுத்திரும் இயக்குனர் ராஜா அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.


பத்திரிக்கை நிருபரான ஜெனிலியா தோற்றுவிக்கும் கற்பனை ராபின் ஹுட் தான் வேலாயுதம் என்ற பாத்திரம். எதேச்சையாக விஜய் செய்யும் விசயங்களும் அவருடைய பெயரும் ஒந்துப்போக விஜய்தான் உண்மையான வேலாயும் என்று அவரை நேரில் பார்த்த ஒரே ஒரு நபரான பாண்டியராஜனும் அவரை நேரில் பார்க்காத மக்களும் நம்பிக்கொண்டிருக்க, அந்த வேலாயுதம் பாத்திரத்தை உண்மையாக்குகிறார் ஜெனிலியா. மற்றவை கலக்கல் கமர்சியல் பட்டாசு.

விஜய் நன்றாக சண்டை போடுகிறார், மிக நன்றாக காமெடி செய்கிறார். அண்ணன் தங்கை பாச‌ காட்சிகளில் ஓவர் சென்டிமென்டை பிழியாமல் காமெடியாக கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. இனிமேல் தமிழ்நாட்டின் செல்ல தங்கச்சி சரண்யா மோகன்தான். ஒன்றுக்கு இரண்டாக ஹீரோயின்கள் தங்களுக்கு கொடுக்கபட்டதை செவ்வனே செய்து கலக்கியிருக்கிறார்கள். ஒல்லி ஹீரோயினை விரும்புபவர்களுக்கு ஜெனிலியா. குஷ்புவுக்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்களுக்காக ஹன்சிகா. கிக்குதா போங்க!. ரோலை பொருத்தவரையில் ஜெனிலியாவுக்கு; வெறும் பாடலுக்கு ஆடிவிட்டு போகும் ரோல் இல்லை. அந்த விசயத்தில் ஜெனிலியா ஸ்கோர் செய்கிறார். ஆனால் கவர்ச்சி விசயத்தில் ஹன்சிகா ஏகப்பட்ட மெஜாரிட்டியில் முன்னணிக்கு வந்து விடுகிறார். காமெடியன்கள் ஏகப்பட்ட பேர் இருந்தாலும் சந்தானம் தனித்து தெரிகிறார்.

ரொம்ப நாளுக்கு முன் ரிலீசான ஆசாத் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால், தமிழ் சினிமாவில் காலாவதியாகிப்போன பாகிஸ்தான் தீவிரவாதம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்டர்நேசனல் தீவிரவாத கும்பலாக இருந்தாலும் அரிவால், கம்பி, கத்தியை கொண்டேதான் அதிகபட்சம் சண்டையிடுகிறார்கள். விஜய், கடத்தப்பட்ட ரயிலை காப்பாற்றியவுடன் படம் முடிந்துவிட்டது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்க அதற்கு மேல் ரொம்ப நேரம் ஜவ்வாக இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் ஜிவ்வென்று இருக்கிறது.

விஜய் ஆண்டனியின் இசை, விஜய்க்கு கைகொடுத்திருக்கிறது. மற்றபடி படத்தில் டெக்னிக்கல் விசயங்கள் நன்றாக இருக்கிறது. ரொம்பவும் லாஜிக் பார்க்காமல், என்ன எதிர்பார்த்து செல்கிறோமோ அந்த எதிர்பார்ப்பை பூர்ந்தி செய்கிறார் வேலாயுதம்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...