தொடர் வெற்றி படங்களை இயக்கினாலும், வேலாயுதம் படம் தான் ராஜாவுக்கு முத்திரைப் பதிக்கும் படமாக இருக்கும் என்று கோடம்பாக்கமே கும்மியடிக்கிறது. ராஜா இயக்கிய அத்தனை படங்களும் ரீமேக் படங்கள் என்றாலும், வேலாயுதத்தை பொறுத்தவரையில் அவருடைய சொந்த கற்பனையில் உருவான படம். இதை அவரே பத்திரிகையாளர்களை அழைத்து சொல்லியிருக்கிறார்.
இந்த படத்தின் அனுபவத்தைப் பற்றி பேசிய ராஜா, "ஜவுளிக்கடைகு துணி எடுக்கப் போனால் அங்க கேட்கிறார்கள், சார் இந்த வருஷம் எந்த படத்தை டப்பிங் செய்ய போகிறீர்கள் என்று. டப்பிங்குக்கும் ரீமேக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கூட என்னை கிண்டல் செய்யுற அளவுக்கு நான் இயக்கிய அத்தனை படங்களும் ரீமேக்காக இருந்தாலும், வேலாயுதம் எனது சொந்த கற்பனை. ஆசாத் என்ற தெலுங்கு படத்திலிருந்து ஒரு சின்ன லைன் மட்டும் எடுத்திருக்கிறேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு. காரணம், இந்த படத்தை இயக்கிய திருப்பதிசாமியும் நானும் நெருங்கிய நண்பர்கள். இந்த கதையை உருவாக்கும்போதே நான் அவருடன் பல நாள் டிஸ்கஷனில் இருந்திருக்கிறேன்." என்றார்.
விஜய்க்கு இந்த படம் வெற்றியை கொடுக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜா, "விஜய் மார்க் போடுகிற ஸ்டேஜையெல்லாம் கடந்துவிட்டார். இன்றைக்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ. படம் வெளியாகிற நாளில் தியேட்டருக்கு திரண்டு வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள். நீங்கள் சொல்வது போல தோல்வி என்பதையெல்லாம் தாண்டிய மாஸ் ஹீரோ அவர். வேலாயுதம் விஜய் படங்களிலேயே தி பெஸ்ட் படமாக இருக்கும். ரா ஒன் என்ன, ரா நூறு கூட வரட்டுமே, ஆயிரம் அறிவு கூட வந்து மோதட்டுமே? வேலாயுதம் பெரிய வெற்றியடையும். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது." என்று கூறினார்.
எப்போதும் சைலண்டாக இருக்கும் ராஜா, இப்போது மற்ற படங்களை சவாலுக்கு அழைக்கும் அளவுக்கு பேசி இருப்பது அத்தனை பேருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஒரு வேளை விஜய் படத்தை இயக்கியதால் இந்த மாற்றமோ?













0 Comments:
Post a Comment