இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, October 30

அது சிக்ஸ் பேக் இல்ல சிங்கிள் பேக் ... இளைய தளபதி விஜய்

அண்ணாமலை படத்தில் ரஜினியின் கேரக்டர் என்ன? பால்காரர்! இவரைப்போலவேVijay வேலாயுதம் படத்திலும் விஜய் பால்காரர்தான். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர் பால் கேனையோ, பசு மாட்டையோ டச் பண்ணவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்திருக்குமோ, இல்லையோ? ஆனால் பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவருக்கு ஒரே ஃபீலிங்.

இதை ஒரு கேள்வியாக கேட்டேவிட்டார். சார் படத்துல நீங்க பால்காரர்தானே? ஆனால் ஒரு சீன்ல கூட உங்களை அப்படி காட்டலையே? இந்த கேள்வியை கேட்டு முடித்தவுடன் அடக்க முடியாமல் சிரித்தேவிட்டார் விஜய். இடம் கிரீன் பார்க் .ஓட்டல். நேரம் மாலை சுமார் ஏழு மணி. இந்த இடத்தில் பத்திரிகையாளர்களை அவர் மீட் பண்ண வந்ததே, 7 ஆம் அறிவு இறங்கி வேலாயுதத்திற்கு ஏறுமுகம் என்ற செய்தி பரவியதால்தான்.

வந்ததிலிருந்தே உற்சாகம் குறையவில்லை அவரிடம். முகத்தில் வழியும் வழக்கமான சோகத்திற்கும் விடை கொடுத்திருந்தார். சார் படத்தில் சிக்ஸ் பேக்ஸ் வச்சு நடிச்சிருந்தீங்க. அந்த அனுபவத்தை சொல்லுங்க என்ற கேள்விக்கு, அட போங்கங்க. அது சிக்ஸ் பேக்கெல்லாம் இல்ல. சிங்கிள் பேக்தான் என்றார் அதே பொல்லாத சிரிப்புடன்.

ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற இன்னொரு கேள்விக்கு மட்டும் சற்று விரிவாகவே பேச ஆரம்பித்தார் விஜய். இப்போ லேட்டஸ்ட்டா வந்த காவலன் படத்தில் என் வழக்கமான பாணியை முற்றிலும் விட்டுட்டுதான் நடிச்சேன். அதில் எனக்கு பஞ்ச் டயலாக்கே கிடையாது. டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை அப்படியே செய்திருந்தேன். ஆக்ஷன் படங்கள் செய்யும் போது சில விஷயங்கள் அதற்காக தேவைப்படும். ஒரு ஆக்ஷன் படத்தில் அண்டர் கரண்ட் இருந்தால் அந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதுன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வார். வேலாயுதம் படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என்றார் விஜய்.

பின் குறிப்பு - 7 ஆம் அறிவு வெளியான மல்டிப்பிளக்ஸ் தியேட்டர்களில் பிரிண்ட் குறைக்கப்பட்டு அந்த இடங்களில் வேலாயுதம் படத்தை ஷிப்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...