இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, October 28

இண்டர்நேஷனல் ஏஜெண்ட் விஜய் ! : கௌதம் மேனன்

விஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் கூறித்து கெளதம் மேனன் " 'யோஹன் - முதல் அத்தியாயம்... படத்துக்கு ஏன் அந்த பெயர் ? ஸோ சிம்பிள்! எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்’னு அவரே சொன்னார்.

நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோஹன்’ ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோஹனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம்.

அடுத்து, ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கும் அதன் அத்தியாயங்களை நீட்டிக்க ஆசை. யார் கண்டா... இது ஒரு சீரிஸாகக்கூட அமையலாம். இந்தப் படத்தின் ஆக்ஷன் விஜய்க்கு செம ஃபிட்டா இருக்கும். கதையைக் கேட்டதும் ரஹ்மான் ஆர்வமா மியூஸிக் போட்டுக் கொடுத்துட்டார். உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோஹன்’!'' " என்று தெரிவித்துள்ளார்
.

2 Comments:

  1. விளம்பரங்கள் மறைபதால் எதையும் சரியாக படிக்க முடிய வில்லை நண்பரே அதை கொஞ்சம் கவனிக்கவும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...