ஆனால் நடுவில் புகுந்து ஆட்டத்தை கலைப்பார் போலிருக்கிறது மசாலா சுடர் பேரரசு! விஜய் நடிக்க இரண்டு படங்களை ஏற்கனவே இயக்கியிருக்கும் பேரரசு அவற்றை வெற்றிப்படமாக்கியதுதான் தொடர்ந்து விஜய்யுடன் அவரை சேர வைத்திருக்கிறது. விவசாயி என்ற தலைப்பில் ஒரு கதையை கூறியிருந்தார் பேரரசு. ஆனால் திருப்பதி படத்தில் அஜீத்தை ஏமாற்றிவிட்டு தனக்கென்று ஒரு போர்ஷனை உள்ளே நுழைத்த பேரரசு பஞ்ச் டயலாக் பேசி அந்நிய நாடுகளையும் அதிர வைத்த கொடுமையெல்லாம் நடந்தது அப்போது. இதில் அதிர்ச்சியான விஜய், பேரரசு வந்தாலே பின் கதவு வழியாக தப்பிக்காத குறைதான்! எப்படியோ விவசாயி கதையை விஜய்யிடம் கூறி அவரை கவர்ந்த பேரரசு நான் உங்கள் படத்தில் ஒரு காட்சியில் கூட தலையை காட்டமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். மக்களை அச்சுறுத்தும் எவ்வித செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று அவர் உறுதியளித்ததை தொடர்ந்து விஜய்யும் மனம் இரங்கியிருக்கிறாராம். சீமானா பேரரசா அல்லது வேறு யாராவதா என்ற குழப்பத்திலிருக்கிறது விஜய்யின் அடுத்த படம்
விஜய் படமான வேலாயுதம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? இப்படி ஒரு பெரும் கேள்வி சுற்றிக் கொண்டிருக்கிறது அவரது ரசிகர்கள் மத்தியில். சீமான் விஜய்க்காக உருவாக்கியிருக்கும் பகலவன்தான் அடுத்த தயாரிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது அவர்களிடத்தில்.
Thursday, June 9
சீமானா, பேரரசா? குழப்பத்தில் விஜய்
6:47:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment