பாலிவுட்டில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் ‘3 இடியட்ஸ்’. இப்படத்தை தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷங்கரின் இயக்கத்தில் மூன்று பேரும் நடிக்க இருக்கும் முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. இப்படத்தில் சத்தியராஜ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது. இந்த வருடம் தீபாவளி அன்று நண்பன் படம் திரைக்கு வரும் என்று இயக்குனர் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது. பாலிவுட்டில் வெற்றி பெற்றதை விட தமிழில் பன்மடங்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நண்பன் படக்குழுவினர் மிகவும் தீவிரமாக உழைத்து வருகிறார்களாம்.
Thursday, June 2
ஷங்கர் இயக்கும் நண்பன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
3:51:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment