ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படம் இம்மாதம் 22-ம் தேதி, அதாவது விஜயின் பிறந்தநாளன்று வெளிவரும் என்று முன்பு அறிவித்திருந்தார்கள். ஆனால் இன்று வெளியான தகவல்படி இப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்டிற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதாம். இப்படம் குறித்து இயக்குனர் ஜெயம் ராஜா கூறியதாவது; “இப்படத்தில் வரும் டயாலாக் சீன்கள் எல்லாம் இந்த வார இறுதிக்குள் படமாக்கப் பட்டு விடும். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்கப்படாமல் இருக்கின்றன. அடுத்த சில வாரங்களில் இப்பாடல்களுக்காக ஐரோப்பா செல்ல இருக்கிறோம். இந்த வேலைகள் அனைத்தும் முடிந்ததும் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளை துவக்கிவிடுவோம். இதனால் வேலாயுதம் படம் அநேகமாக ஆகஸ்டில் வெளிவரும் என நினைக்கிறேன்” என்றார். படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட காரணம் என்ன என்று நாம் விசாரித்த போது வேறு விதமான தகவல்கள் கிடைத்தன. அதன்படி, அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும், அதனால்தான் தாமதமானது என்றும் தெரியவந்தது. இப்படத்தில் இருநாயகிகள். ஒருவர் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோட்வானி. இருவருமே இப்படத்தை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள். இப்படம் வெற்றி பெற்றால் தமிழில் படவாய்ப்புகள் பெருகும் என்பதால்தான் இந்த ஆவல். இது வரும் ஆகஸ்டில்தான் தீரும் போலிருக்கிறது.
Thursday, June 2
விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!
3:52:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment