இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, June 22

விஜய் பிறந்தநாள்; எழும்பூர் பிரசவ ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்

நடிகர் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டார். எழும்பூர் அரசு தாய்சேய் மருத்துவ மனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மனைவி சங்கீதாவுடன் நேரில் சென்று தங்கமோதிரம் அணிவித்தார். பரிசு பொருட்களும் வழங்கினார். இந்த ஆஸ்பத்திரியில் தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். டாக்டர்கள், நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் விஜய்யை வரவேற்றனர். அவரை காண ஆஸ்பத்திரி முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள தாய் சேய் நல அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம் அணிவித்தார்.

தமிழகம் முழுவதும் 500 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். ஏராளமானோர் நீண்ட கியூவில் நின்று வாழ்த்தினர். நடிகர்கள் ஜீவா, தாமு, டைரக்டர்கள் ஷங்கர், ஏ.வெங்கடேஷ், பேரரசு, ராஜா, தயாரிப்பாளர்கள் ஆஸ்கார் ரவிச்சந்திரன், கலைப்புலி தாணு, ஆர்.பி. சவுத்ரி மோகன், நடராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

பின்னர் ஏழைகளுக்கு புடவை, வேட்டிகளை விஜய் வழங்கினார். மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார். ரசிகர்கள் 500 பேர் ரத்த தானம் செய்தனர். சாலிகிராமம் பாலலோக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை விஜய் துவக்கி வைத்தார். டாக்டர் மோகன் தலைமையில் இந்த முகாம் நடந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் கண்தானம் செய்தனர்.

சின்மயா நகரில் உள்ள குழந்தை ஏசு கோவிலில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு விஜய் இலவச மதிய உணவு வழங்கினார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...