நடிகர் விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படம் 'பகலவன்'. இப்படத்தை சீமான் இயக்க இருக்கிறார்.
தற்போது 'பகலவன்' படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்கும் சீமானிடன் இப்படம் குறித்து கேட்ட போது " அரசின் அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறார்கள். அனைத்தும் தனியார்மயமாகி விட்டால் நாடே முதலாளிகளின் கையில் அடைப்பட்டு விடும்.
இதனை எதிர்த்து போராடும் ஒரு வீரமான இளைஞனைப் பற்றிய படம் தான் 'பகலவன்'. கண்டிப்பாக விஜய்க்கு இந்த திரைப்படம் ஒரு மைல்கல் ஆக அமையும்.
விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். நாயகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தம்பி விஜய்க்கு இன்னும் ஒரு வாரத்தில் முழு கதை மற்றும் திரைக்கதையை கூறி விடுவேன்.
இன்னும் ஒரிரு மாதங்களில் பகலவன் தொடங்கப்படும் " என்று கூறினார்.
Tuesday, June 7
விஜய்க்கு சீக்கிரம் கதை சொல்வேன் : சீமான்
10:18:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment