இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத் ஐகானாக இருப்பவர் ரஜினியா, கமலா, விஜயா, அஜித்தா என்று இணையதளத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிமிடம் வரை பதிவான வாக்குகளின்படி நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார். தமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இன்றைய இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்த நிமிடத்தின் நிலவரப்படி 1182 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 879 (74.4%) வாக்குகள் பெற்று நடிகர் விஜய் முன்னிலையில் உள்ளார். 107 வாக்குகள் பெற்று அஜித் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இவரையடுத்து சூர்யா, கமல், ரஜினி, சிம்பு, விக்ரம் மற்றும் ஆர்யா, தனுஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். விஷாலுக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை. இன்று காலைதான் இந்த சர்வே துவங்கியது. வரும் ஜூலை 30-ம் தேதிதான் இந்த சர்வே முடியும். அதற்குள் இந்த நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்துத்தான் பார்க்க வேண்டும். இப்படி ஒரு வித்தியாசமான சர்வே இணையத்தில் நடைபெறுகிறது என்பதை நடிகர் விஜய் தனது டுவிட்டர் இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
Friday, June 24
இன்றைய யூத் ஐகான் யார் என்ற சர்வேயில் நடிகர் விஜய் முதலிடம்!
10:37:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment