விஜய் தற்போது நடித்து வரும் 'வேலாயுதம்', 'நண்பன்' படங்களை அடுத்து நடிக்கவிருக்கும் படம் 'பகவலன்'. இப்படத்தை சீமான் இயக்க தாணு தயாரிக்க இருக்கிறார்.
அரசாங்கம் அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கம் செய்வதை எதிர்த்து போராடும் ஒரு துடிப்புமிக்க இளைஞனின் கதை தான் 'பகலவன்'.
'போக்கிரி' படத்தை அடுத்து இப்படத்தில் விஜய் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்பது தான் புதுத்தகவல்.
படத்தின் கதைப்படி டாக்டராக இருக்கும் விஜய்க்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் பிரச்னை வெடிக்கிறது. அப்பிரச்னையில் போலீஸ் அதிகாரி 'நீ ஒரு டாக்டர் உன்னால் என்னை என்ன செய்ய முடியும்' என்று கேட்கிறார். இதனால் கோபமடைந்த விஜய் ஐ.பி. எஸ் படித்து போலீஸ் அதிகாரியாக மாறி அவருடன் மோதுவாராம்.
ஆக, விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு போக்கிரி பொங்கல் காத்து இருக்கிறது.
Wednesday, June 15
போலீஸான டாக்டர் விஜய் !
11:33:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment