8:06:00 AM
| விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா உள்ளிட்ட பலர் நடிக்க ஷங்கர் இயக்கி கொண்டிருக்கும் படம் 'நண்பன்'. இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நண்பன் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகள் மற்றும் படத்தை பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அவரது இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
தற்போது இயக்குனர் ஷங்கர் தனது இணையத்தில் கூறியிருப்பது " நண்பன் படத்திற்காக ஐராப்பா, அந்தமான், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.
60% சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தின் கஷ்டமான, முக்கியமான காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கி விட்டோம். இது வரை எடுத்த காட்சிகளை எடிட் செய்து டப்பிங் ஆரம்பித்து விட்டோம்.அடுத்த வாரம் முதல் ஒரு நீண்ட ஷெட்டியூல் நடைபெற உள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்.
அடுத்த சந்தோஷமான செய்தி 'நண்பன்' படத்தின் சவுண்ட் வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்ற இருக்கிறார். நாங்கள் பாரத் பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தோம். அப்போது சிங்கப்பூரில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் யாராவது சொந்தக்காரர்கள் அல்லது எனது ரசிகர்களாக இருக்கும் என கருதினேன். பின்பு ரஜினி சாராக இருக்குமோ என்று நினைத்தேன்.
போன் அட்டண்ட் செய்தால் ரஜினி சார் தான். எனக்கு ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்னிடம் நலம் விசாரித்தார்.! பழைய சந்தோஷத்துடன் பேசினார். உற்சாகமாக ஆர்வத்துடன் பேசினார்.. அவர் 45 நாட்கள் ஒய்விற்கு பிறகு சென்னை திரும்புவதாக கூறினார். " என்று கூறியுள்ளார்.
|
0 Comments:
Post a Comment