அஜீத் நடித்து வரும் 50வது படம் 'மங்காத்தா'. இப்படத்தை அஜீத்தின் பிறந்தநாள் வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 15 வெளியிட முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
விஜய் நடித்து வரும் 52வது படம் 'வேலாயுதம்'. விஜய், ஜெயம் ராஜா கூட்டணியில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தையும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிட பணியாற்றி வருகிறார்களாம்.
அஜீத், விஜய் இருவரின் படங்களுமே ஒரே தினத்தில் வெளிவந்தால் விநியோகஸ்தர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் மங்காத்தா, வேலாயுதம் இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் இரண்டு படங்கள் ஒரே தினத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். இது குறித்து வேலாயுதம் படக்குழுவினரிடம் விசாரித்த போது " வேலாயுதம் படத்தின் இசை வெளியீடு ஜுலை இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம். இப்படத்தில் எல்லா பாடல்களும் விஜய்க்கு பிடித்த மாதிரி அமைந்து உள்ளது.
விஜய்யும் இசை வெளீயிட்டு விழாவை ஆர்வத்தோடு எதிர் நோக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளிவருவதில் எந்த சந்தேகமும் இல்லை.
'மங்காத்தா' படமும் அதே தினத்தில் வாய்ப்பில்லை. விஜய், அஜீத் இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவருமே பேசி வைத்து 'மங்காத்தா' படத்தை வெளியிடுவதை தள்ளிப் போடலாம். வேலாயுதம் தள்ளி போக வாய்ப்பு இல்லை" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
எப்படியோ இரண்டு படங்களுமே அவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தால் சரிதான்!
Tuesday, June 28
ஒரே நாளில் விஜய் - அஜீத் பட ரிலீஸ் ?
11:24:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment