இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, June 21

5வது 'விஜய் விருதுகள்' ஜுன் 25ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

 5வது 'விஜய் விருதுகள்' ஜுன் 25ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ்த் திரையுலகினருக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் 'விஜய் விருதுகள்' ஐந்தாவது முறையாக வரும் 2011 ஜூன் 25ஆம் தேதியன்று சென்னையில் உள்ள நேறு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக பிரமாண்டமான முறையில் நடைபெற்று வந்த இவ்விருது வழங்கும் விழா ஐந்தாவது ஆண்டாக, இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாகவும், புதுமையாகவும் நடைபெறவுள்ளது.

இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விஜய் ரசிகர் எக்ஸ்பிரஸ் பஸ் சென்னையிலிருந்து புரப்பட்டு செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்துள்ளது. இந்த விஜய் எக்ஸ்பிரஸின் மூலம், மக்களின் ஃபேவரெட் திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குநர், பாடல் ஆகிய ஐந்து பிரிவுகளை மக்களே தேர்ந்தெடுத்து தங்களது வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பேவரெட் பிரிவிற்கான விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

பேவரெட் நடிகர்கள் வரிசையில் கமல்ஹாசன,ரஜினிகாந்த், விஜய்,அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, கார்த்தி, தனுஷ், ஆர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதுபோன்று நடிகைகள் வரிசையில் ஐஸ்வர்யாராய், அமலா பால், அஞ்சலி, அனுஷ்கா, ஜெனிலியா, நயந்தாரா, தமன்னா, திரிஷா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இயக்குநர்கள் வரிசையில் கெளதம் மேனன், ஹரி, கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, மணிரத்தினம், பிரபு சாலமன், ராஜேஷ், ஷங்கர், வசந்த பாலன், வெங்கட் பிரபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திரைப்படங்களின் வரிசையில் அங்காடித் தெரு, பாஸ் என்கிற பாஸ்கரன், எந்திரன், களவாணி, மதராசப்பட்டினம், மைனா, நான் மகான் அல்ல, பையா, ராவணன், சிங்கம், விண்ணைத்தாண்டி வருவயா ஆகிய படங்கள் இடம்பெறுகிறது.

பாடல்கள் வரிசையில் அரிமா அரிமா (எந்திரன்), என் காதல் சொல்ல (பையா), ஹோசன்னா (விடிவி), இறகைபோலே (நான் மகான் அல்ல), காதல் வந்தாலே (சிங்கம்), கிளிமாஞ்சாரோ (எந்திரன்), ஓமனபெண்ணே (விடிவி), துளித்துளி (பையா), உம்மேல ஆசதான் (ஆயிரத்தில் ஒருவன்) ஆகிய பாடல்கள் இடம்பெறுகின்றன.

இதுதவிர ஜூரிக்களின் தேர்வுப்படி பல விருதுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும் தமிழ்த் திரைப்படத்துறையிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு செவாலியர் சிவாஜி கணேசன் விருதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...