பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பெப்ஸி விஜயனின் மகன் சபரீஷ் நாயகனாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தியில் முன்னணி நடிகர் சல்மான்கான் இசையை வெளியிட நடிகர் விஜய் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரஸ்யங்கள் :
* இசை வெளியீட்டு விழாவை பார்க்க வந்த கூட்டத்தை விட, சல்மான்கானை பார்க்க வந்த கூட்டம் அதிகம் இருந்தது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நட்சத்திரங்கள் கூட சல்மான்கானை தான் முக்கியமாக வாழ்த்தி பேசினார்கள்.
* கலைப்புலி தாணு பேசும் போது " மேடையில் இந்தி போக்கிரியும் தமிழ் போக்கிரியும் அருகே அமர்ந்து இருக்கிறார்கள். நான் படத்தின் பெயரை சொன்னேன்" என்று கூறி அனைவரது கரகோஷத்தையும் பெற்றார்.
* ஏனோ விஜய்யை விட சல்மான்கானிடம் தான் அதிகமாக பேசிக் கொண்டிருந்தார் ஸ்ரெயா.
* படத்தின் டிரெய்லரையும், மூன்று பாடல்களையும் திரையிட்டார்கள். அதில் தனது நடிப்பு மற்றும் நடனம் மூலம் வந்திருந்த பலரது பாராட்டை பெற்றார் சபரீஷ்.
* நடிகர் ஸ்ரீஹரி ( மாவீரன் படத்தில் நடித்தவர் ) முதலில் தமிழில் அனைவரும் வாழ்த்தி பேசிவிட்டு, பின்னர் இந்தியில் சல்மான்கானை பாராட்டி பேசினார்.
* படத்தின் பாடல் காட்சி திரையிட்ட போது சீமானும், சல்மானும் அருகருகே அமர்ந்து இருந்தது பலரது புருவத்தை உயர்த்தியது. இலங்கையில் நடைபெற்ற IIFA விருதுகள் வழங்கும் விழாவில் சல்மான்கான் கலந்து கொண்டதால் அவரது படங்களை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியவர் சீமான். அதனால் தான் இரண்டு மான்களையும் கண்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.
* சீமான் பேசும் போது படத்தில் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டி பேசினார். சல்மான்கானை பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. படத்தின் இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு பேசும் போது " எனது அம்மா சல்மான்கானின் தீவிர ரசிகர். இங்கு கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்" என்று கூறினார்.
* பெப்ஸி விஜயன் பேசும் போது " எனது அழைப்பை ஏற்று சண்டிகரில் இருந்து வந்த சல்மான்கானுக்கும், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சீனாவில் தனது அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு அவசரமாக திரும்பிய விஜய்க்கும் எனது மனமார்ந்த நன்றி" என்றார்.
* சல்மான் கான் அதிகமாக பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். சல்மானோ சுருக்கமாக பேசிவிட்டு அமர்ந்தார். " இங்கு இந்த விழாவைப் பார்க்கும்போது ஆச்சர்யத்தில் பேச்சே வரவில்லை..பிஸியான வேலைகளுக்கு இடையிலும் இங்கு பல முன்னணி திரையுலகினர் கூடி இருப்பது, ஃபெப்சி விஜயனின் அன்புக்கு கட்டுப்பட்டு தான். சபரீஷ் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருக்கு இந்தி திரையுலகிற்கு வருவதாக எண்ணம் இருந்தால், அவரை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.. " என்று பேசினார்.
* ஜெயம் ரவி, மிஷ்கின், தரணி, உதயகுமார், கேமராமேன் கோபிநாத் உள்ளிட்ட பலரும் படத்தை வாழ்த்தி பேசினார்கள்.



















0 Comments:
Post a Comment