
Saturday, June 11
இலங்கைக்கு பொருளாதார தடை ஜெயலலிதாவுக்கு விஜய் பாராட்டு
6:07:00 PM
No comments
இலங்கையில் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்து போர் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபையால் போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். மற்றும் இலங்கை தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
உரிமைகளையும் உடைமைகளையும் உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம். இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும், சந்தோசத்தோடும் சரி சமமான உரிமைகளோடும் வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment