விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா என்று பிஸியான நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் பிஸி பிஸியான இயக்குனர் ஷங்கர். படப்பிடிப்பும் ஈமெயில் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவே ஷங்கருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறதாம். ஏன்? மேற்படி நால்வருமே பரபரப்பானவர்கள் என்பதால் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்கள். அதனால் சொன்ன காலத்திற்குள் படத்தை முடித்தால்தான், எங்க பிழைப்பு ஸ்மூத்தா போகும் என்கிறார்களாம். அதுமட்டுமல்ல, படத்தை நவம்பருக்குள் வெளியிட வேண்டும் என்று நெருக்குகிறார்களாம் தயாரிப்பு நிறுவனத்திலும். பொதுவாகவே தான் இயக்கும் படங்களின் எடிட்டிங் நேரத்தில் அங்கேயே இருப்பார் ஷங்கர். இப்போது எல்லாமே தலைகீழ். எடுத்த பகுதிகளை எடிட்டருக்கு அனுப்பிவிட்டு அதை எப்படி செய்திருக்கிறார் என்பதை கூட கவனிக்க நேரமில்லாமல் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் ஹாரிஸ் ஜெயராஜின் மெத்தனமும் இவரது கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருக்கிறதாம். படத்தில் விஜய்- இலியானா பாட வேண்டிய டூயட் பாடலை இன்னும் முடித்து தராமலே இருக்கிறார் ஹாரிஸ். இவர் வெளிநாட்டில் நடைபெறவிருக்கும் இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளப் போவதால், இந்த வேலையை தள்ளிப் போடுகிறாராம். எலக்ட்ரிக் ரயிலில் எல்லாமே வேகம்தான். ஆனால் செயினை பிடித்து தொங்குகிறாரே ஹாரிஸ்! என்னதான் செய்யப் போகிறாரோ ஷங்கர்…?
Monday, June 27
விரு விரு ஷங்கர், வீம்பு பண்ணும் ஹாரீஸ்
8:36:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)














0 Comments:
Post a Comment