இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, June 1

விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேருவேன்!: நடிகை சோனா!

நடிகை சோனா இன்று (ஜுன்1ம் தேதி) தனது பிறந்த நாளை கொண்டாடினார். வடபழனியில் உள்ள ஹோட்டலில் நடிகர் விஜய் ரசிகர்களின் குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்கு மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். அக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கினார்.

பின்னர் அங்கிருந்த பத்திரிக்கை நிருபர்களிடையே பேசிய சோனா " நான் விஜய்யின் தீவிர ரசிகை. எனவேதான் விஜய் ரசிகர்கள் குழந்தைகளை அழைத்து பிறந்த நாள் கொண்டாடினேன். விரைவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேருவேன்.

விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பேன். எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகிறது. படத்தின் கதை மூன்று கட்டங்களாக இருக்கும். நானும் இதில் நடிக்கிறேன். எனது சிறு வயது கேரக்டர்களில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது.

“கோ” படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. நிறைய பேர் எனது நடிப்பை பாராட்டினார்கள். மலையாளத்தில் மிலி என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும் பாக்யராஜ் 2010 என்ற படத்தை தயாரித்து வருகிறேன்." என்று கூறினார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...