ஷங்கரின் நண்பன், ராஜாவின் வேலாயுதம் இரண்டும் முடியும் கட்டத்தில் இருக்கிறது, இதற்கிடையே விஜய்யின் அடுத்தபடம் எதுவென்று பரபரப்பு பற்றி எரிய அதில் எண்ணெய் ஊற்றினார் ஏ.ஆர். முருகதாஸ். ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சூர்யா நடிக்க ஏழாம் அறிவை இயக்கி வருகிறார் இந்தப்படம் ஆகஸ்டில் திரைக்கு வர இருக்கிறது. இது முடிந்ததும் விஜய் நடிக்க ஒரு படத்தை இயக்குவதாக கிட்டத்தட்ட செய்தி உறுதியாக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை முருகதாஸின் நிறுவனத்தின் பேரில் எஸ்.ஏ சந்திரசேகர் தயாரிக்கலாம் என்றும் தெரிகிறது. இந்நிலையில் விஜய்யை தன் படத்தில் நடிக்க கெளதம் மேனன் அழைத்துள்ளார், ஏற்கனவே பலப்படங்களை அறிவித்திருக்கும் கெளதம் மேனன் சென்ற வாரத்தில்தான் ஜீவா நடிக்கும் படத்தை உறுதி செய்திருக்கிறார். இந்தப்படம் வரும் ஆகஸ்டில் தொடங்க இருக்கிறது. இது முடிந்ததும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 செய்வதாக அறிவித்திருக்கிறார். அனேகமாக முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு விஜய்யும், ஜீவா படத்தை முடித்துவிட்டு கெளதம் மேனனும் ஜோடி சேரக்கூடும். இதனால் விடிவி 2 தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது.
Thursday, June 30
ஷங்கர், முருகதாஸைத் தொடர்ந்து கெளதம் மேனன் – விஜய் காட்டில் மழை
8:26:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)














0 Comments:
Post a Comment