
Sunday, June 12
கேன்டிட் கேமிராவில் 'நண்பன்' ஷூட்டிங்?!
11:30:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடித்துவரும் படம் 'நண்பன்'. இப்படத்தை ஷங்கர் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது சென்னையில் சுற்றி உள்ள சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தினர். மற்றும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம். 'எந்திரன்' படப்பிடிப்பின் போதே கூட்டம் கூடி விட்டதால் இந்த முறை மக்களுக்கே தெரியாமல் CANDID CAMERA மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம். தற்போது கூட ஒரு கார் சேஸிங் காட்சியை இந்த கேமிரா மூலம் படமாக்கி இருக்கிறார். கிண்டி கத்திபாரா பாலத்தில் செல்பவர்கள் பார்த்து போங்கள் உங்களை தாண்டி கார் ஓட்டி செல்பவர் விஜய்யாக கூட இருக்கலாம். விஜய்க்கு இந்த வருடம் ஹாட்ரிக் ஆண்டாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். முதலில் 'காவலன்', ஜூலையில் 'வேலாயுதம்', தீபாவளிக்கு 'நண்பன்' என இந்த வருடம் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள். இருக்காத பின்ன.. இப்ப நண்பனோட ஆட்சிதான.....!

0 Comments:
Post a Comment