‘கஜினி’ படத்தை கொடுத்ததிலிருந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் மார்கெட் சட்டென்று உயர்ந்து விட்டது. இங்கிருந்து பாலிவுட்டிற்கு போனார். அங்கும் ஒரு ஹிட் கொடுத்தார். தற்போது சூர்யாவை வைத்து ‘7ஆம் அறிவு’ என்ற படத்தை தமிழில் இயக்கி வருகிறார். இப்படம் முடிந்ததும் இளைய தளபதி விஜய்க்காக ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வந்திருக்கிறது. நண்பன் படப்பிடிப்பில் இருந்த போது விஜய்யை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் முருகதாஸ். கதை பிடித்துப் போகவே உடனே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனம் கபூரை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம முருகதாஸ். இப்படத்திற்கு இவரது ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்களாம். இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிட இருக்கிறதாம்.
Thursday, June 23
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்!
2:03:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment