
Wednesday, August 24
யோஹன் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன்!!
5:46:00 AM
No comments
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக, "மதராசபட்டினம்" புகழ் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்திற்கு "யோஹன் அத்தியாயம் ஒன்று" என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் 2012ம் ஆண்டு துவங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, மதராசபட்டினம் படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். தற்போது எமி ஜாக்சன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இந்தபடத்தை முடித்தை பின்னர் விஜய் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment