இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, July 2

நண்பன் படத்தின் அடுத்த பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதி செய்தார் மதன் கார்க்கி


பாடலாசிரியர் மதன் கார்க்கி நண்பன் படத்தின் அடுத்த பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதி செய்தார். ஹாரிஸ் ஜெயரஜ் இப்பாடலுக்கு சிறப்பான இசை அமைத்துள்ளார். இந்த பாடல், சிறப்பாக பதிவுசெய்யப்பட்டது என மதன் கார்க்கி உலகில் உள்ள தனது ரசிகர்களுக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார்.அவர் பாடல் மற்றும் இசை நிச்சயமாக அனைத்து இசை ரசிகர்களது இதயத்தையும் தொடும் என்று கூறியுள்ளார். சங்கர் இப்படத்தை மிக வேகமாக எடுத்து வருகிறார் படத்தின் 60 சதவீதம் முடிவடந்த நிலையில் இப்படத்தினை ஆகஸ்டில் முடிக்க உள்ளார். அத்துடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது எடிட்டிங்க் வேலைகளையும் தொடங்கவுள்ளார். இப்படத்தின் எடிட்டர் அன்டனி ஆவார். நண்பன் படத்தின் இரு பாடல்காட்சிகள் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. விஜய் இலியானாவின் டூயட் பாடலும் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் பங்குபெறும் பாடலும் படமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். விஜய் இலியானா பங்குபெறும் டூயட் பாடலில் விஜய் அரச கெட்டப்பில் வருகிறார் என்பது கூடுதல் தகவல்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...