இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, August 30

எப்படி இருக்கு 'நண்பன்’ அனுபவம்? ஜீவா


கௌதம் மேனன், மிஷ்கின், ஜனநாதன் என்று அடுத்தடுத்து நட்சத்திர இயக்குநர்களின் புராஜெக்ட்டுகளில்... ஜீவா. இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர், சமீபத்தில் சிம்பு பற்றி வெளியிட்ட ஸ்டேட்மென்ட் பரபரப்புத் தீயைப் பற்றவைத்தது. ''அப்படி என்னதான் ரௌத்திரம்?'' என்று அறிய விரும்பினேன்.

''எப்படி இருக்கு 'நண்பன்’ அனுபவம்?''

''இது இந்தி ரீ-மேக் படமா இருந்தாலும், ஷங்கர் சார் அதைத் தமிழுக்குத் தகுந்த மாதிரி அழகான அனுபவமா மாத்தி இருக்கார். பல வெற்றிகளுக்குப் பிறகும் எளிமையா இருப்பது, படப்பிடிப்புக்கு முன்தயாரிப்புகளோட வர்றதுனு ஷங்கர் சாரோட வெற்றிக்கு ஏகப் பட்ட காரணங்கள். 'ஷங்கர் சார் ஷூட்டிங் ஸ்பாட்டை இவ்வளவு கலகலப்பா இதுக்கு முன்னே பார்த்ததே இல்லை’னு எல்லோரும் சொல்றாங்க. அப்படி ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ் ரெகுலேஷன் முன்னாடி இருந்ததுபோல. நாங்க போய் எல்லாத்தையும் உடைச்சுட்டோம்!''


''நாலு வார்த்தைகளில் கேள்வி கேட்டால், இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வது விஜய் வழக்கம். மனிதர் ஸ்பாட்ல எப்படி?''

''விஜயைவிட நான் 10 வயசு சின்னவன். ஆனா, மனிதர் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருப்பார். ஏதாவது சீரியஸான ஷாட்டுக்கு முன்னாடி அவரைப் பயங்கரமாக் கலாய்ச்சுடுவேன். 'டேய்... நீ தயவுசெஞ்சு பக்கத்துல நிக்காதடா! டேஞ்சரஸ் ஃபெலோ நீ!’னு ஜாலியா மிரள்வார். ஒருமுறை அந்தமானில் படகில் போயிட்டு இருக்கும்போது... பேய் மழை. எந்தத் தீவில் இருக்கோம்னு தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. 'டேய்... இங்கேயே ஏதாவது நண்டு நத்தைகளைப் பிடி. சுட்டுச் சாப்பிட்டுப் பொழுதைக் கழிப்போம்’னு சொல்லிட்டு, ஜாலியா இருந்தார் விஜய்!''

''கௌதம், மிஷ்கின்னு அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி இருக்கிறீர்களே?''

''உண்மையில் கௌதம் மேனனைத் தவிர இதுவரை வேறு யாரிடமும் நானாகச் சென்று வாய்ப்பு கேட்டது இல்லை. 'உங்க மாதிரி ஒரு டைரக்டர்கூட வொர்க் பண்ணணும்னு ஆர்வமா இருக்கேன். இல்லைன்னா, 'குவார்ட்டர் சொல்லு மச்சி’னு ராயபுரம் பக்கமே செட்டில் ஆகிடுவேன் போலிருக்கு’னு சொன்னேன். 'என்ன ஜீவா இப்படிச் சொல் றீங்க. நானே லோக்கலா ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன்’னு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கௌதம். 'லோக்கலா எடுத்தாலும் அதிலேயும் உங்க டச் இருக்குமே’ன்னேன். சமந்தாதான் ஜோடி. சந்தானமும் இருக்கார். கலக்கலாக் கலாய்ப்போம்!''

''மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் 'முகமூடி’ பற்றி சொல்லுங்க?''

''காதல், டெக்னாலஜினு ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டுக்குத் தேவையான எல்லா விஷயங்களும் 'முகமூடி’யில் இருக்கு. குங்ஃபூ பிராக்டிஸ், பாடி பில்டிங்னு ஏகப்பட்ட வேலைகள். சிக்ஸ் பேக் வைக்க முடியாட்டியும் அட்லீஸ்ட் நாலஞ்சு பேக் வெச்சாத்தானே மரியாதையா இருக்கும்? கண்டிப்பா 'முகமூடி’ பார்ட் 1, பார்ட் 2 வரும்னு நம்பறேன்.

'வந்தான் வென்றான்’ முடிச்சாச்சு. பிரமாதமா வந்திருக்கு. காமெடி, பாடல் கள்னு எல்லாத்தையும் கதையோட அழகாக் கோக்குறதுல கண்ணன் சார் ஸ்பெஷல். அடுத்து, நானும் ஜெயம் ரவியும் ஜனநாதன் சார் படத்தில் நடிக்கிறோம். ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் ஜனா சார் படத்தில் இருக்கும். அதைத் தொடர்ந்து நானும் ஆர்யாவும் சேர்ந்து நடிக்கலாம்னு இருக்கோம். அந்தப் படத்தை எஸ்.எம்.எஸ். ராஜேஸ் இயக்குவார். லைஃப் ஜாலியா இருக்கு பாஸ்!''

''ஆமா, நீங்களும் சிம்புவும் ஒரே தெருவில்தானே குடியிருக்கிறீர்கள். சமீபத்தில் 'சிம்பு எனக்கு நண்பன் இல்லை’ என்று சொல்லிவிட்டீர்களே, ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் பிரச்னை?''

''எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்னை. 'கோ’ முதலில் அவர் நடிக்க வேண்டிய படம். பிறகு எனக்கு வந்தது. 'கஜினி’... அஜீத் சார் நடிக்க வேண்டியது, 'தூள்’, 'சிங்கம்’ இரண்டும் விஜய் சார் நடிக்க வேண்டியதுனு ஏற்கெனவே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட முன் உதாரணங்கள் இருக்கு. முதலில் ஒரு படத்துக்கு ஒரு நடிகர் கமிட் ஆகி, பிறகு இன்னொரு நடிகர் நடிப்பது சாதாரணமான சம்பவம்.

அந்த வகையில்தான் 'கோ’ படத்தில் நான் நடிச்சேன். அடுத்து சிம்புவுக்குச் சொன்ன கதையைத்தான் கௌதம் சார் எனக்காகப் படம் பண்ணப்போறார்னு ஏகப் பட்ட வதந்திகள். ஆனால், இது புது ஸ்க்ரிப்ட். இப்படிப் பத்திரிகைகளில் கிசுகிசுவாக வந்த விஷயம் இது. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், 'சிம்பு உங்கள் நண்பரா?’னு கேட்டாங்க. 'இல்லை’னு சொன்னேன். தொடர்ச்சியா சிம்புவைப் பற்றியே கேள்விகள் வர, 'சிம்புவைக்கூட நம்பிடலாம். அவர் நேருக்கு நேர் சண்டை போடக்கூடியவர். ஆனா, நண்பர்கள் மாதிரி கூடவே இருப்பவர்களிடம்தான் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்கதான் பின்னாடி வந்து குத்திட்டுப் போயிடு வாங்க’னு சொன்னேன். ஆனால், நான் சொன்னது அப்படியே தலைகீழா மாறி பத்திரிகைகளில் நெகட்டிவா வந்துடுச்சு. டாம் குரூஸ் எப்படி எனக்குப் பழக்கம் இல்லையோ, நண்பர் இல்லையோ, அதே மாதிரிதான் சிம்புவும் எனக்கு நண்பர் இல்லை. அதே நேரத்தில் எனக்கு அவரோடு எந்தப் பிரச்னையும் இல்லை. சம்பாதிப்பதற்காக நான் சினிமாவுக்கு வந்தவன் கிடையாது. நான் பிறக்கும்போதே 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’தான். சின்ன வயதில் இருந்து சினிமா ஆர்வம் அதிகம். நல்ல படம் பண்ணணும், எல்லோரோடும் ஃப்ரெண்டா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். ஏனோ சிம்புவுடன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு செட் ஆகலை. மற்றபடி விஜய் சாரில் தொடங்கி விஷால், ரவி, ஆர்யானு மற்ற எல்லோரும் ஃப்ரெண்ட்ஸாத் தான் பழகுறோம். நான் என் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமே நம்புறவன். மற்றபடி எனக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை!''

Monday, August 29

மிக சிறப்பாக வந்திருக்கிறது நண்பன்..! ஷங்கர்

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த நடிக்க 'நண்பன்' படத்தினை இயக்கி வருகிறார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்து வருகிறது.

இப்படம் குறித்து ஷங்கர் தனது இணையத்தில் " படத்தின் 98.8888 % பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 1.1112 % படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. ஒரு பாடலும், மற்றொரு பாடலின் சில பகுதிகளும் எடுக்க வேண்டும். செப்டம்பர் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் துவங்க இருக்கிறது.

எடுத்தவரை பார்த்ததில் 'நண்பன்' திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளார்கள். இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் டப்பிங் செய்யப்பட்டு விட்டன.

'நண்பன்' படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் வகையில் விஜய் அனைவருக்கும் விருந்து அளித்தார். படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள ஜாலியாக காமெடி, டான்ஸ் என விருந்து நல்லபடியாக அமைந்தது.

இப்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த வேண்டும் என்பதால் ஹாரிஸ் ஜெயராஜை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்

தீபாவளி திருநாளில் இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம்..!

தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீசாகின்றன. விஜய் நடிக்கும் “வேலாயுதம்” படம் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நாயகிகளாக ஹன்சிகா, ஜெனிலியா நடித்துள்ளனர். ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இதன் பாடல் சி.டி. வெளியிட்டு விழாவை மதுரையில் ரசிகர்களை அழைத்து நடத்தி உள்ளனர். இப்படத்தில் விஜய் பால்காரர் கெட்டப்பில் வருகிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
சூர்யா நடித்த 7ஆம் அறிவு படமும் தீபாவளிக்கு வருகிறது. இதில் கமல் மகள் ஸ்ருதி நாயகியாக

நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார். சூர்யா, ஏ.ஆர்.கூட்டணியில் வந்த கஜினி படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 7ஆம் அறிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
தரணி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படம் தீபாவளிக்கு வருகிறது. படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மயக்கம் என்ன படமும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகிறது.
இதுபோல் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் வெடி படமும் தீபாவளிக்கு வருகிறது. அதிகமான தியேட்டர்களை இப்படங்கள் ஆக்கிரமிக்கும் என்பதால் சிறு பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வராது என கூறப்படுகிறது. அவை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.

வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Velayudham Audio Launch



விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு

மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ம் விழா மற்றும் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார். விழாவில் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ïட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்த விஜய், அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பாடல்களை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், உள்பட பலர் கலந்து கொண்டன



Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Photos, Images, Stills

Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Photos, Images, Stills

Velayudham Audio Launch Function Photos




Velayudham Audio Launch Photos, Images, Stills


Velayudham Audio Launch Photos, Images, Stills

Velayudham Audio Launch Function Photos
Velayudham Audio Launch Function Photos
Velayudham Audio Launch Photos, Images, Stills

Velayudham Audio Launch Function Photos
Velayudham Audio Launch Function Photos
Velayudham Audio Launch Function Photos


Velayudham Audio Launch

Velayudham Audio Launch Function PhotosVelayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch

Velayudham Audio Launch


Velayudham Audio Launch Function Photos
Velayudham Audio Launch
Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Function Photos

Velayudham Audio Launch Function Photos
Velayudham Audio Launch Function Photos

Sunday, August 28

வேலாயுதம் சூப்பர் ஹிட் பாடல்கள் இலவச தரவிறக்கம்


Posted Image

Right Click To Open New Teb



click to play the song Rathathin Rathamay - Haricharan, Madhumitha

click to play the song Molachu Moonu - Prasanna, Supriya Joshi

click to play the song Chillax Karthik, Charulatha Mani

click to play the song Mayam Seidhayo Sangeetha Rajeshwaran

click to play the song Sonna Puriyadhu Vijay Antony, Veera

click to play the song Vela Vela Vijay Antony, Mark





MEDIAFIRE LINK

Related Posts Plugin for WordPress, Blogger...