இளைய தளபதி விஜய் நடிக்கும் நண்பன் படத்தின் பாடல்கள் அமைப்பத்தில் ஹாரிஸ் பிசியாக இருந்து வருகிறார். மூன்று பாடல்கள் முடிந்துள்ள நிலையில், எல்லாப் பாடல்களும் இளமைத் துள்ளளோடும் விஜய் ரசிகர்கள் திருப்திபடுத்தும் வகையில் பாடல்கள் இருக்கும் என சொல்கிறார் ஹாரிஸ்.
இதே போல சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் பின்னணி இசை சேர்ப்பும் ஒரு பக்கம் நடந்துவருகிறது. காக்க காக்க, கஜினி, ஆதவன், வாரணம் ஆயிரம் என ஹாரிஸின் இசையில் சூர்யா நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆடியோவாகவே இருந்திருக்கிறது. அந்த வகையில் இதுவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தன் இசையைப் பற்றி ஹாரிஸ் பேசும்போது, ஏழாம் அறிவு படத்தைப் பொருத்த வரை சூர்யாவின் கடுமையான உழைப்பு ஏ.ஆர்.முருகதாஸின் வித்யாச சிந்தனை என பெரிதளவில் பேசப்படுகிறது. அதற்கு நியாயம் செய்கிற வகையில் என் இசை இருக்கும். ஆயிரம் வருடத்திற்கு முன்பு இருந்த இசை கருவிகளை இதில் பயன்படுத்தி உள்ளேன். சீன பாரம்பரிய இசையைக் கொடுக்க முயற்சி செய்துள்ளேன்.
இளைய தளபதி விஜய் , சூர்யா இவர்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பு எனக்கு தெரியும். இருவருக்கும் ஏற்றாற் போல் அதே சமயம் படத்திற்கு தேவையான இசைப் பணிகள் நடந்துவருகிறது என்றார்.














0 Comments:
Post a Comment