சேலத்தில் ஆர்ப்பரிச்ச கூட்டத்தை கண்டு மலைத்த விஜய் வெகு உற்சாகத்தில் இருக்கிறார்.விஜய் மக்கள் இயக்கத்தின் சக்தி பலமிக்கதாக மாற்ற வேண்டும் என அவர் நம்புகிறார்.இதற்காக மக்களை மாதம் தோறும் சந்திக்க அவர் முடிவு செய்துள்ளதாக விஜய் தந்தை எஸ்.ஏ.சி கூறினார்
அவரோட ரசிகர்கள் நேத்து வரைக்கும் சும்மா ! இருந்தாங்க...எப்போ சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வை ஆதரிச்சு களம் இறங்கினாங்களோ,அப்பவே அரசியல் ஆர்வம் ரசிகர்கள் மனதில் வேர் ஊன்றிடுச்சி...
விஜய்க்கு வேலாயுதம்,நண்பன்,யோகன் நு நிறைய பட வேலைகள் இருந்தாலும் இன்னொரு பக்கம் தமிழகம் முழுக்க இருக்கும் மக்களை சந்திக்க விரும்புகிறார்....
வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பா போட்டியிடுவாங்க...கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றால்தான் அதிகமா மக்களுக்கு உழைக்க முடியும்.
இவ்வாறு எஸ்.ஏ.சி ஜூனியர் விகடன் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
என்னோட கருத்து என்னன்னா உங்க குடும்பத்தை மட்டும் கவனிங்க...என் படத்தை வந்தா தியேட்டர்ல பாருங்கன்னு சொன்னார் அஜீத்.நேத்து வரைக்கும் சும்மா இருந்த விஜய் ரசிகர்களுக்கு அ.தி.மு.க க்கு எடுபுடி வேலை செஞ்சது முதல் அரசியல் ஆசை வந்திருச்சின்னு சொல்றார் எஸ்.ஏ.சி...விஜய்க்கு மக்கள் கூட்டம் உண்டு.ஆனா அவரை தன்னை வழி நடத்தும்தலைவரா மக்கள் இன்னும் உணரலை...அதுக்கு நிறைய காலம்,பக்குவம் எல்லாம் இருக்கு....
அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா என பொதுமேடையில் கூச்சமில்லாமல் பாடும் இவர் ,இன்னும் நிறைய மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்..சமச்சீர் கல்விக்கு கூட ஒரு குரல் கொடுத்திருக்கலாம்..(.கொடுத்திருந்தா ..தெரிஞ்சிருக்குமில்ல..!!!!)..
இன்னும் நிறைய புக்ஸ்,வரலாறு எல்லாம் படிக்கணும்..பேச்சு திறமையை வளர்த்துக்கணும்..இதெல்லாம் இல்லாம தமிழன் யாரையும்,முதல்வர் ஆக்க மாட்டான்..!!!
Wednesday, August 10
விஜய் ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டி
5:07:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment