விஜய்யை வைத்து முருகதாஸ் படம் இயக்குகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்தப் படம் குறித்த ஒரு மறுப்பே முருகதாஸ் விஜய்யை இயக்குவதை உறுதி செய்திருக்கிறது.

முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு மாலை நேரம் மழைத்துளி என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு தகவல் உலவி வந்தது. இதனை முருகதாஸ் மறுத்துள்ளார். விஜய்யை வைத்து நான் இயக்கப் போகும் படத்துக்கு இன்னும் பெயரே தேர்வு செய்யவில்லை என்றும் மாலை நேரம் மழைத்துளி என்பது பொய்யான தகவல் என்றும் கூறியுள்ளார்.
இந்த மறுப்பு, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கயிருப்பதை உறுதி செய்திருக்கிறது.













0 Comments:
Post a Comment