இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, August 11

காத்திருக்கும் ஸ்ரேயா..!

தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் நாயகியாக அறிமுகமான படம் 'மழை'.

'மழை' படம் வரவேற்பை பெறாவிட்டாலும், தமிழ் திரையுலகத்தில் இவருக்கு சுக்கிர திசை தான். ரஜினி ஜோடியாக சிவாஜி, தனுஷ் ஜோடியாக 'திருவிளையாடல் ஆரம்பம்', இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக 'அழகிய தமிழ்மகன்' என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பின்பு இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. விக்ரம் ஜோடியாக 'கந்தசாமி', விஷால் ஜோடியாக 'தோரணை', சரத்குமார் மகளாக 'ஜக்குபாய்', ஆர்யா ஜோடியாக 'சிக்கு புக்கு' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு பெற்று தரவில்லை.

இதனால் மீண்டும் தெலுங்கு, இந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வந்தவர், தமிழில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவர இருக்கும் 'ரெளத்திரம்' படத்தை தான் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாராம்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...