இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, August 11

அதிர்ஷ்டக் காற்று அடிக்கிறது...! அனுஷ்கா பக்கம்

தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தாலும் அவ்வப்போது தமிழில் பெரிய நாயகர்கள் படத்தில் நடித்து வந்தார் அனுஷ்கா. விக்ரம் ஜோடியாக நடித்த 'தெய்வத்திருமகள்' படம் வெளியாகி இவரது நடிப்பிற்கு வரவேற்பை பெற்று தந்தது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுஷ்கா தெலுங்கில் எவ்வளவோ படங்கள் நடித்தாலும் தன் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பது தமிழில் வெளிவந்த 'தெய்வத்திருமகள்' படம் தான் " என்று கூறியுள்ளார்.

அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக தெலுங்கு தயாரிப்பாளர்கள், நாயகர்கள் வரிசை கட்டினாலும், இனிமேல் தமிழ் சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்த இருக்கிறாராம். தெலுங்கில் வெறும் கவர்ச்சியாக நடித்ததில் அவரும் மிகவும் போர் அடித்து விட்டதாம்.

ஆகையால் தமிழில் இனிமேல் 'தெய்வத்திருமகள்' படத்தினை போல நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க இருக்கிறாராம்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கு இவர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கூறுகிறது படக்குழு. இவரைத் தவிர சோனம் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரது பெயரும் பரீசலனையில் இருக்கிறதாம்.

ஜீவா - கெளதம் மேனன் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கும் அனுஷ்கா நாயகி ஆகலாம் என்கிறார்கள். விக்ரம் - இயக்குனர் விஜய் இணையும் அடுத்த படத்திற்கும் இவர் தான் நாயகி என்கிறார்கள்.

தெலுங்கில் அடித்த அனுஷ்கா அலை, இன்னும் சில மாதங்களில் தமிழ் திரையுலகையும் ஆட்கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...