நண்பன், வேலாயுதம் படங்களுக்குப் பிறகு சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் தற்போது விஜய்-கௌதம் இணையும் யோஹன் படம் பற்றிய செய்திகள் வெளிவந்தன, ஆனால் விஜய்யும் ஏ ஆர் முருகதாசும் இணையும் படம் பற்றிய செய்திகளும் பரபரத்தன உண்மையில் பகலவன் என்னாச்சு? இயக்குனர் சீமானிடமே கேட்டோம்..
“எல்லா ஹீரோக்களுக்குமே ஷங்கர் மணிரத்னம் படங்களில் நடிக்கும் ஆசை இருக்கும். நாங்கள் பகலவனைத் தொடங்க இருந்தபோது விஜய்க்கு ஷங்கரிடமிருந்து அழைப்பு வந்தது. விஜய் நண்பன் படத்திற்கு சென்றார். அதன்பிறகு மணிரத்னத்திடமும் வாய்ப்பு வந்தது. இந்த படத்திற்கு பிறகு பண்ணிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். நானும் தேர்தல் வேலைகளில் இறங்க அந்த முடிவு சரியாகப்பட்டது.
திடீரென மணிரத்னம் படம் இல்லையென்ற செய்தி வர நாங்கள் பகலவன் தொடங்க தயாராகி வருகிறோம். இப்போது தம்பி முருகதாஸ் படத்தில் நடிப்பதாக செய்திகள் வருகின்றன. பகலவனிலும் முருகதாஸ் படத்திலும் விஜய் ஒரே நேரத்தில் தேதிகள் பிரித்துக் கொடுத்து நடிக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்.
இன்னொரு பக்கம் மும்பை கம்பெனி, ஆஸ்கார் பிலிம்ஸ் மற்றும் விஜய் அப்பா இயக்குனர் எஸ். ஏ. சி. இணைந்து தயாரிக்க அறுபது கோடியில் தயாராகும் படம் ஒன்றின் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சீமானை சீக்கிரம் கண்டுக்கோங்க தளபதி!
Thursday, August 18
விஜய் படம் நம்பிக்கை இழக்காத சீமான்..!
3:56:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment