
Saturday, August 20
விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலாயுதம்’ படத்தின் கதை..?
5:35:00 AM
No comments
இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலாயுதம்’ படத்தின் கதை என்ன என்று, அப்படத்தின் இயக்குனரான ஜெயம் ராஜாவிடம் கேட்டோம். அவரோ ஒளிவு மறைவுமின்றி கதையை அழகாக விவரித்தார். அப்படி என்னதான்யா வேலாயுதத்துல இருக்குன்னு கேக்கறவங்க தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கலாம்.
“பவனூர் என்ற கிராமத்தில் வாழும் பால்கார இளைஞன் வேலு. அன்பால் ஊரையே தன் பாச வளையத்துக்குள் கொண்டு வந்தவன். இன்னொரு புறம் தன் தங்கை மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணன். அவனையே சுற்றிச்சுற்றி வரும் முறைப்பெண்.
இதையும் தாண்டி அவன் மனதுக்குள் புகுந்து காதல் விதைக்கும் இளம்பெண். இவர்களை சுற்றி நிகழும் சுவாரசிய சம்பவங்கள்தான் இப்படத்தின் கதைப் பின்னணி. விஜய்யின் உணர்ச்சிமயமான காட்சிகள் படத்துக்கு பெரிய பிளஸ்சாக இருக்கும்'' என்றார்.
விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஜெனிலியாவும், ஹன்சிகா மோட்வானியும் நடிக்கிறார்கள். படம் வந்த பிறகு வேலாயுதம் எப்படி என்று தெரிந்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment