இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, August 2

விஜய் படம் என்பதால் ஏற்றுக்கொண்டேன்: நடிகை அனுயா

சிவா மனசுல சக்தி” மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா.

கவர்ச்சி தான் இவருக்கு முக்கியம். தொடர்ந்து இவர் நடித்த ”மதுரை சம்பவம்”, ”நகரம்” போன்ற படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள் தான் வர மறுக்கின்றன.

இந்த நிலையில் தான் அவர் ஷங்கர் இயக்க விஜய் நடிக்கும் ”நண்பன்” படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பெரிய இயக்குனர், அதிக சம்பளம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் விடயம் வெளியில் தெரிந்ததும், நிறைய பேர் இதேபோல அக்கா வேடங்களோடு வந்து கதவைத் தட்ட, அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம் அனுயா.

அதுமட்டுமல்ல, ரூ.30 லட்சம் சம்பளம் என்றால் பேசுங்கள், இல்லாவிட்டால் வேறு ஆளைப் பாருங்கள் என்கிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் நாயகி வேடங்கள் தான் செய்வேன்.

நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு? என்றார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...