இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, August 10

விஜய் அரசியலில் யாருக்கு போட்டி?

விஜய்யின் தந்தயும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் அரசியல் பிரவேசம் பற்ரி கூறுகிறார். "விஜய்யோட ரசிகர்கள் நேத்து வரைக்கும் சும்மா இருந்தாங்க. எப்போ சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிச்சுக் களம் இறங்கினாங்களோ, அப்ப அரசியல் ஆர்வம் ரசிகர்கள் மனசில் வேர் ஊன்றிடுச்சு! சேலம், தர்மபுரி, தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறவங்க வெறும் ரசிகர்கள் மட்டும் அல்ல... பாரம்பரியமா திமுகவில் முக்கியமான பொறுப்பில் இருந்தவங்க. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வேலை செஞ்சவங்க. அதனால்தான், கடந்த தேர்தலில் திமுக காட்டின கோல்மால் வேலைகளை சரியாக் கண்டுபிடிச்சு முறியடிச்சாங்க எங்கள் இயக்கத் தொண்டர்களுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் வேணும். நடந்த தேர்தலில், அரசியல் ஒத்திகை பார்த்தாச்சு இனிமே களத்தில் இறங்கிட வேண்டியதுதான். விஜய், இப்போதைக்கு அரசியலில் நேரடியா இறங்க மாட்டார். முன்னாடி சொன்ன மாதிரி மாசா மாசம் ஒரு மாவட்டத்தில் மக்கள் இயக்கத்தோட விழா நடக்கும். அவர் கண்டிப்பா அரசியலில் இறங்குவார். அந்தக் காலகட்டத்தில் யாருக்குப் போட்டி என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!" இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...