நடிகர் விஜய்யை இயக்கப் போகும் முன்னணி இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, சீமான், கெளதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களைத் தொடர்ந்து, இப்போது புதிதாக இணைந்து இருப்பது இயக்குனர் விஜய்.
இயக்குனர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் இணைய இருக்கிறார்களாம். கெளதம் மேனன் - விஜய் இணையும் படத்திற்கு முன்பாக இப்படம் அமையலாம் என்று நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இயக்குனர் விஜய்க்கு நெருக்கமானவர்களோ அஜீத்துடன் 'கிரீடம்' படத்தில் ஏற்பட்ட நட்பு இன்னும் தொடர்வதால், இருவரும் 'பில்லா -2' படப்பிடிப்பு முடிந்தவுடன் இணைவது உறுதி என்று கூறுகிறார்கள்.
'தெய்வத்திருமகளு'க்கு கிடைத்த வரவேற்பால் அதே அணி யு.டிவி தயாரிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் இணைகிறார்கள் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.
விஜய் யாரை இயக்குவார் என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.
Saturday, August 20
இளைய தளபதி விஜய்யை இயக்கப் போகும் முன்னணி இயக்குனர்கள்!
4:43:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment