இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, August 23

விஜய்யுடன் நடித்த காவலன்' பட ரோல் மாதிரி நான் இதுவரையில் எந்த ரோலிலும் நடித்ததில்லை அசின்!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த அசின் சமீப காலமாக பாலிவுட் பட வாய்ப்புகளை மட்டும் ஆர்வமாக ஏற்று நடித்து வருகிறார்.

ஆனாலும் தன்னை நட்சத்திரமாக வளர்த்து ஆளாக்கிய தென்னிந்திய பட உலகை அசின் மறக்காமல் இதயத்தில் வைத்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் நடித்த எனக்கு ரசிகர்கள் அமோகமான ஆதரவை அளித்துள்ளார்கள். கேரளாவில் என்னை 'மண்ணின் மங்கையாக' போற்றினார்கள்.

முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானேன். தெலுங்கில் நடித்து 'பிலிம்பெர்' ,'நந்தி' விருது வாங்கியதை எண்ணி எப்போதும் பெருமையடைகிறேன்.

இந்தியில் சஜித் கான், ரோஹித் ஷெட்டி ஆகியோரின் படங்களில் பிஸியானேன். அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பாலிவுட்டுக்கு என் 'தேதிகளை' முன்கூட்டியே வழங்கியுள்ளேன்.

தமிழில் விஜய் உடன் நடித்த 'காவலன்' பட ரோல் மாதிரி நான் இதுவரையில் எந்த ரோலிலும் நடித்ததில்லை. அதைப்போல வித்தியாசமான ரோல் என்றால் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவேன்.

எந்த மொழி படம் என்றாலும் பட வாய்ப்பை ஏற்கும் முன் படத்தின் திரைக்கதை என்னுடைய ரோல், டைரக்டர், படக்கம்பெனி, படத்தில் நடிப்பவர்கள் என குறிப்பிட்ட இந்த 'ஐந்து' விஷயங்களை மட்டும் கவனிப்பேன்.

சம்பளத்தை பற்றி அவ்வளவாக கவலைப்படமாட்டேன். பாலிவுட்டில் என்னுடைய நெருக்கமான நட்பு நாயகர்களான சல்மான், நிதின் முகேஷ் ஆகியோருடன் என்னை இணைத்து நிறைய தகவல்கள் பரவி வருகின்றன.

சல்மான் நிதின் இருவரின் குடும்பத்தினருக்கும் நான் நெருக்கமான தோழியாக உள்ளேன் என்று கூறியுள்ளாராம் அசின்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...