இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, August 17

விஜய்யின் ரோல் மாடல் !

விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 28ம் தேதி மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியுடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற இருக்கிறதாம்.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்நிகழ்ச்சி குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது :

"நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அரசியலில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றில்லை. 'வேலாயுதம்' செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். தமிழகத்தில் ஆட்சி மாறிய பிறகு தான் திரைத்துறைக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் மாதாமாதம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். கடந்த மாதம் சேலத்தில் பிரமாண்டமான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த மாதம் வரும் 28-ம் தேதி மதுரை புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் நடக்கிறது.

நடிகர் விஜய் 1992-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அது நற்பணி இயக்கமாகவும், தற்போது மக்கள் இயக்கமாகவும் மாறியுள்ளது. இது ஏழைகளுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பதோடு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.

விஜய்க்கு எம்.ஜி.ஆர். என்றால் ரொம்ப இஷ்டம். அவர் நடிகனாக வாழ்க்கையைத் துவங்கி, முதல்வராகி உலகை விட்டு மறைந்தும் மக்கள் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.

அவரை ரோல் மாடலாக வைத்து தான் விஜய்யும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். "

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...