இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, August 12

தீபாவளிக்கு தான் 'வேலாயுதமா'..?

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'வேலாயுதம்' படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது விஜய் ரசிகர்களிடையே மிக பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஆகஸ்ட் 15 இசை வெளீயிடு என்று கூறினார்கள். ஆனால் இப்போது அந்த தேதியும் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் படம் ஏன் தாமதம், இசை எப்போது என்பது குறித்து படக்குழுவிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் :

படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் இப்போது சிம்பிளாக வைத்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டியது இருக்கிறதாம். படத்தின் POST PRODUCTION வேலைகள் நிறைய இருப்பதால் பட வெளியாக தாமதம் ஆகுமாம். ஆகஸ்ட் 28ம் தேதி இசை வெளியீடு மதுரையில் நடைபெற இருக்கிறது. அனைத்து மாவட்டத்திலும் இருந்து விஜய் ரசிகர்களை அழைத்து இவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவுக்கான வேலைகளில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்.

பட வேலைகள் அனைத்தும் முடிந்து செப்டம்பர் இறுதியில் அல்லது தீபாவளிக்கு தான் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...