இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, August 6

விஜய் ஜோடியாக ஸ்ருதி ஹாசன்!?

ரு படம் இறுதி கட்ட படபிடிப்பில் இருக்கும்போதே அடுத்தப் படத்தை தொடங்கி விடுவது, அல்லது அறிவித்து விடுவது நடிகர் விஜய்யின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களை அடுத்து விஜய் யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதில் குழப்பம் தொடர்ந்து கொண்டிருந்தது. தினம் ஒரு செய்தி உலவிக் கொண்டிருந்த நிலையில் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனை தொடர்பு கொண்டோம்.


“ விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார் ” என்ற உறுதியான தகவலை நமக்குத் தந்தார்.

7-ஆம் அறிவு படத்தின் ஈ.எஃப்.எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தற்போது முடிந்து இயக்குனர் முருகதாஸ் தயாராவதற்கும், விஜயும் வேலாயுதம் நண்பன் ஆகிய படங்களின் பணிகள் முடிந்து வருவதற்கும் சரியாக இருக்கும் என்பதால் அடுத்து முருகதாஸ் இயக்கம் என்பதை விஜய் உறுதிபடுத்தி விட்டாராம். அதேபோல இந்தப்படம் விஜயின் ரசிகர்களுக்கு மாபெரும் கமர்ஷியல் விருந்தாக இருக்கும் என்கிறார்கள். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
இதில் முருகதாஸின் ஃபாக்ஸ் ஸ்டூடியோ இடம்பெறாது என்கிறார்கள். இதற்கிடையில் ஸ்ருதி ஹாசன் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்கலாம் என்றும் முருகதாஸ் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருகிறது. ஏ.ஆர்.முருகாதஸ் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் பட்த்துக்கு இசையமைக்கிறார்.
இதற்கிடையில் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் பகலவன் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்!

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...