
Monday, August 8
சந்தோஷத்தில்! ஸ்ருதிஹாசன்
5:26:00 AM
No comments
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் படம் 'ஏழாம் அறிவு'. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கிறார்.
'ஏழாம் அறிவு' படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டவர், அடுத்து தான் இயக்கப் போகும் விஜய் படத்திற்கும் இவரையே ஒப்பந்தம் செய்யாலமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம்.
'ஏழாம் அறிவு' அக்டோபர் மாதம் வெளிவர இருக்கிறது. அதனை அடுத்து இளைய தளபதி விஜய் படத்தை தொடங்கி 4 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் செய்தி.
இந்தி திரையுலகில் முதல் படத்தில் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும், தமிழ் திரையுலகில் பெரிய ஹீரோக்கள் படங்களில் புக் ஆவதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஸ்ருதி
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment